Categories
நினைவுகள்

கிடைக்குமா ரிவர்ஸ் பட்டன் – நீங்கா நினைவுகள்

சொந்த ஊர் எப்போதும் சொர்க்கம் தான்.ஆனால் சில யதார்த்தம் கசக்கிறது. மருந்து போலத்தான் என்றாலும் கசப்பு கசப்பு தான். ஓடி, ஆடி புழுதியில் உருண்ட அதே தெருக்கள்… புழுதி இல்லை இப்போது, சிமெண்ட் சாலைகள். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் ஏதோ ஒரு வசதியான வீட்டுத் திண்ணையில் தெருவிலுள்ள மொத்த கும்பலும் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்போம். மின்சாரம் வந்து தெரு விளக்குகள் ஒளிர்ந்ததும் ஊரைப் பிளக்கும் கூப்பாடு போடுவோம். கரண்டு வந்திருச்சே, கரண்டு வந்திருச்சே என்று […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

நடப்பு அதிசயம்- கதவில்லா கிராமம்.

நம்மில் பலர் இதை எங்காவது கேள்விப்பட்டிருக்கலாம் சிலர் அறிந்திருக்கலாம்.ஆனால் தெரியாதவர்களுக்கு இது அதிசயம் தான். தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். சமீபத்தில் தமிழில் வெளியான நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் என்ற படத்தில் கூட ஒரு ஒழுக்கமான கிராமத்தைப்பற்றி காட்டியிருப்பார்கள்.ஆனால் அதைவிட ஒழுக்கமான கிராமம் நிஜத்தில் இன்றளவும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாங்க இருக்கோம் என்கிறார்கள், இந்த சனி சிங்னாப்பூரார்கள். ஆமாம். மகாராஷ்டர மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்திலுள்ள சனி சிங்னாப்பூர் என்ற கிராமம் தான் அது. […]

Categories
சிறுகதை தமிழ்

மகப்பேறு – சிறுகதை

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]

Categories
கருத்து தமிழ்

வாடகை வீட்டு உரிமையாளர்களின் அபத்தமான நிபந்தனைகள்

வாடகை வீடு என்பதை இங்கு பெரும்பாலான நடுத்தர மக்கள் கடந்து வந்திராமல் இல்லை. அதுவும் தான் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை தேடி பெருநகரங்களுக்குக் குடியேறும் இளைஞர்கள், திருமணம் ஆகும் முன்பு பேச்சிலர்களாகவும் (மணமாகாத இளைஞர்கள்) , பிறகு திருமணம் முடித்து குடும்பத்துடனும் வாடகை வீடுகளிலேயே காலம் தள்ள வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அப்படியான வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைக்குக் குடி வருபவர்ரகளிடம் காட்டும் அதிகாரத்தைப் பற்றிய எனது சில அனுபவங்களை, நினைவுகளைப் பகிர்கிறேன். பேச்சுலராக நான் […]