Categories
தற்கால நிகழ்வுகள்

எங்களையும் பாருங்க – தனியார் ஊழியர் நலன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 ஆவது ஊதியக்குழு நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆம். தற்போது 7 ஆவது ஊதியக்குழு நியமித்தபடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு, அடுத்த ஊதியக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு நியமிக்கப்பட்டு பத்தாண்டுகள் ஆக இருப்பதால், 2026 முதல் பண வீக்கத்தின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் முடிவு செய்யப்பட்டு அதன்படி ஊதியம் வழங்கப்படும். இது நல்ல விஷயம் தான். இளம் வயதில் முறையாக சிந்தித்து […]

Categories
கருத்து குட்டி கதை தகவல் தற்கால நிகழ்வுகள்

பேராசை பெருநஷ்டம்- இணைய மோசடிக் கதைகள்

பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கலவரத் திருவிழா

கலவரமான கோவை உணவுத் திருவிழா! கோவையில் சென்ற வார இறுதி நாட்களில் கொடிசியா வளாகத்தில் உணவுத்திருவிழா என்ற விளம்பரம் மிகவும் பிரபலமாக இணையத்தில் பரவி இருந்தது. கிட்டதட்ட 499 உணவு வகைகளை வெறும் 799 ரூ கொடுத்தால் உண்டு மகிழலாம் என்றும், அது போக, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்கும் என்றும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. நாமும் கூட அந்த விளம்பரத்தைக் கண்டிருக்கக் கூடும். வெறும் 800 ரூபாயில் 499 உணவு வகைகளை உண்டு மகிழப்போகிறோம் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அதானிக்கு மேலும் தலைவலி

தொழிலதிபர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியிருக்கிறது. அமெரிக்க நீதித் துறை (department of justice) அவரை 250 மில்லியன் டாலர் (சுமார் 21,000 கோடி ரூபாய்) லஞ்ச ஏற்பாட்டின் மேற்பார்வை மற்றும் அதனை மறைத்து அமெரிக்காவில் நிதி திரட்டிய வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது. புதன்கிழமை நியூயார்க்கில் தாக்கல் செய்யப்பட்ட இக்குற்றச்சாட்டு, 62 வயதான கௌதம் அதானிக்கு மிகப் பெரிய சவால் என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரது வணிக சாம்ராஜ்யம் […]