அறிவை, அன்பைப் பகிர மொழி அவசியமில்லை.ஒரு செயலோ, சைகையோ அல்லது ஒரு புன்னகையோ கூடப் போதும்தான். ஐந்தறிவு கொண்ட ஜீவன்களிடம் நாமென்ன பேசிப் பழகியா அன்பைப் பகிர்கிறோம்? ஐந்தறிவென்ன நம்மில் பலர் உயிர் இல்லாத வாகனங்கள் உட்பட சில பொருட்களின் மீதும் கூட பேரன்பு கொண்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் மொழி அவசியமில்லை. உலகில் மொழி வரும் முன்பே, அன்பும் அறிவும் பகிரப்பட்டு தான் இருந்திருக்கிறது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் சோறு கிடைக்காது, ஏக் சாய் தேதோ என ஹிந்தி பேசத் […]
