நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]
Tag: மாசு
நிகழ்ந்த அந்த மறக்க முடியாத பேரழிவும், நிகழும் இப்போதைய விளைவுகளும், வளர்ச்சி என்ற பெயரில் தான் முதலில் துவங்கப்பட்டது. விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, விவசாய வளர்ச்சிக்கான திட்டம் என்ற ஏதோ ஒரு பெயரில் தான் இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் எலிகளின் மீது சோதனை ஓட்டம் போல வளரும், வளராத நாடுகளில் மக்கள் தொகையுள்ள நகரங்களில் செயல்படுத்தப்படுகின்றன. நான் இங்கே பேசுவது போபால் விஷவாயு சம்பவத்தை உருவாக்கிய யுனியன் கார்பைடு நிறுவனத்தைப்பற்றி தான். விவசாய வளர்ச்சி […]
மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]
தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]