நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]
Tag: மறைவு
நீதி நிலைநாட்டப்பட்டது
தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம். ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது. கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை […]
மறைந்தார் மன்மோகன் சிங்
ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]
மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]
நடிகர் டெல்லி கணேஷ். நாடக சபை முதல் இன்றைய வெப் சீரிஸ், அதாவது இணையத் தொடர் வரை நடித்த ஒரு மகா நடிகர். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது, சில படங்களில் பிண்ணனி குரலும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் அதிசயத் தகவல். இவர் எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் என்பது மனதிற்கு நெருக்கமான செய்தி. பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே இவரது படங்களைப் […]
மிகப்பெரிய தொழிலதிபர், பெரிய கார்ப்பரேட் முதலாளி என்பதையெல்லாம் தாண்டி, மிகப்பெரிய கொடை வள்ளல் என்ற ஒரு விஷயம் தான் அவர்மீது மொத்த இந்திய மக்களுக்கும் அன்பு ஏற்படுத்தியது. கொரோனா காலங்களிலும் சரி, மற்ற காலங்களிலும் சரி அள்ளிக் கொடுப்பதில் ஒரு போதும் அவர் எவரை விடவும் குறைந்ததில்லை. சரியான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும் வாய்வழியாக சொல்லப்படும் கருத்தின் படி அவர் தனது சம்பாத்தியத்தில் கிட்டதட்ட 60-65 சதவீதம் வரை தானமாக அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் அவ்வளவு கொடுத்திருந்தாலும் […]