எப்படி ஆரம்பிக்கலாம் என்று தான் புரியவில்லை.யாரைத் திட்டுவது, யாரைப் பாராட்டுவது என்பதும் புரியவில்லை. ஆனால் நாமெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய முட்டாள்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.நேற்று காலை எனது உறவினரிடமிருந்து ஒரு புலனச் செய்தி. அதில் ஒரு புகைப்படம், இது என்ன என்று தெரிகிறதா என்ற கேள்வியோடு. இதென்ன தெரியாதா?சொடக்குத் தக்காளி, சில பேருக்கு மணத்தக்காளி என்றால் புரியும். ஆனால் அது அடைபட்டிருந்த டப்பாவையும், அதன்மீது ஒட்டப்பட்டிருந்த விலையையும் பார்க்கும் போதுதான் பகீரென இருந்த்து. தோராயமாக ஒரு பத்து […]
