நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]
Tag: மருத்துவம்
சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் , எல்லை மீறிச் செல்பவன் அதே கோபத்தால் அழிவான் என்பதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய பரபரப்பான மருத்துவர் கத்திக்குத்துச் செய்தி. அதேபோல வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற ரீதியில் அந்த மருத்துவரும் கூட ஏதோ ஒரு விதத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். காரணம் நானும் எனது சொந்த அனுபவத்தில் பல மருத்துவர்களை சந்தித்தும் , […]
கற்க கசடற கற்பவை கற்றபின்நிற்க அதற்குத் தக என்ற குறளை முதல் வகுப்புக்கும் முன்னரே படித்து விடுவதால் இந்தத் தலைமுறை கற்பவற்றைக் கற்ற பிறகு அதற்குத் தகுந்தாற் போல நிற்பதில்லை போல. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கல்வியை படிக்கும் இந்தத் தலைமுறை அதன்படி நடந்து கொள்கிறதா என்பதை நாம் அன்றாட செய்திகளின் மூலமாக அறிந்து கொள்ளத்தானே செய்கிறோம். மேலும் கல்வி என்பது பொது ஒழுக்கத்தையும், மனித நேயத்தையும், அன்பையும் சக […]
நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]
கருப்பை வாய் புற்றுநோய் (cervical cancer) எனப்படும் நோய் மாதவிடாய் முடிந்த பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒரு கொடிய புற்றுநோய். இது மாதவிடாய் முடிந்த பெரும்பாலான பெண்களை பாதிக்கும் நோயாக கண்டறியப்படுகிறது. HPV அதாவது Human Pappiloma Virus என்ற விஷக்கிருமியால் இது உருவாகிறது. இந்த வைரஸ் இருக்கும் அனைவருக்கும் இந்த புற்றுநோய் வரும் என்பது கட்டாயமல்ல. சிலரது உடல்வாகு காரணமாக, எதிர்ப்பு சக்தி அந்த வைரஸ் கிருமிகளை அழித்து விடுகிறது. புகை பழக்கம், பாலியல் தொடர்பு, […]