Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

அமாவாசை சம்பிரதாயம்- சடங்கா அல்லது வியாபாரமா?

முதலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி என்ற இரு நாட்களும் பூமியின் சுழற்சியால் மாதம் ஒரு முறை வரும் சுழற்சியான நாட்கள் என்பதையும், இந்த இரு நாட்களுக்கும் விசேஷ சக்தி என்பதெல்லாம் இல்லை என்பதையும், ஈர்ப்பு விசையில் உள்ள மாறுதல் காரணமாகவே கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக உள்ளன என்பதையும் அறிவியல் பூர்வமாக நாம் அறிந்திட வேண்டும். சரி இது அறிவியல்.அதாவது ஒரு இருசக்கர வாகனம், அல்லது ஒரு மகிழுந்து எப்படி இயங்குகிறது என்று கேட்டால், இயந்திரவியல் விளக்கம் […]

Categories
கருத்து சிறுகதை தமிழ்

மருந்தை விட்டது போகட்டும், வாழப்பழத்தையும் விட்டுட்டான்!

நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப்பணியின் அதிகாரமும், தனித்துவமும்.

அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தியா/மூடநம்பிக்கையா? என்னுடையது என்ன?

சில விஷயங்களின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பதே தவறு என்று காலம் காலமாக வழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் மூடநம்பிக்கை என்ற ஒன்றை இன்றும் கூட அழிக்க முடியாமல் உள்ளது. பக்தி என்பதை இங்கு யாரும் குறை கூறவில்லை. கடவுளின் மீதான நம்பிக்கையும், பயமும் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றால் அதைவிட இந்த உலகத்திற்கு என்ன மகிழ்ச்சி இருந்து விடப்போகிறது? ஆனால் அந்த பக்தியின் பெயரால் நிகழ்த்தப்படும் மூட நம்பிக்கை சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், பிற மனிதர்களின் மீதான வன்முறைகளையும் சரி […]

Categories
சினிமா தமிழ்

ரசிக்கக்கூடிய என்டர்டைனர் – கடைசி உலகப்போர் – சினிமா விமர்சனம்

Lockdown சமயத்தில் வெளியான சிறப்பான கலை படைப்புகளில் ஒன்று “நான் ஒரு ஏலியன்“ என்ற ஹிப்ஹாப் தமிழாவின் இசைதொகுப்பு.  நல்ல நினைவுகளை ஏன் தேடிக்கொள்ள வேண்டும், நட்பு பாராட்டுவத்தின் முக்கியத்துவம், வாழு வாழவிடு, போன்ற தத்துவங்கள் வெளிப்படும் துடிப்பான ஆல்பம் என்று சொல்லலாம். எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தாநினைவு மட்டும்தான் இருக்கும்,அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள்தான்கடைசி வரைக்குமே நிலைக்கும்.நல்ல நட்பு, சுற்றி சொந்தம்,கடைசி வரைக்குமே அன்ப தரனும்.ஒரு வேலை மரணம் வந்தாக்கூடநான் சிரிச்சிக்கிட்டேதான் கண்ண மூடனும்.நான் […]

Categories
சினிமா தமிழ்

மக்கள் தவறவிட்ட நல்ல சினிமா- ஜமா- விளக்கம் மற்றும் விமர்சனம்

சினிமா என்பதே பொழுதுபோக்குக்காகதான் என்ற வரம்பையும் மீறி சில சினிமாக்கள் நல்ல ஆழமான கருத்துகளையும், சிந்தனைகளையும், சில குறிப்பிட்ட மக்களின் வலியையும் வாழ்க்கை முறையையும் கூட நமக்கு ஆழமாக மனதில் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சில சினிமாக்கள் பிரபலத்துவத்தின் காரணமாக அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. பல சினிமாக்கள் முகம் தெரியாத காரணத்தால் முடங்கி விடுகின்றன. அப்படி முடங்கிப்போன ஒரு சினிமா தான் சமீபத்தில் வெளியான ஜமா என்ற திரைப்படம். இவ்வளவு விமர்சனம் பேசும் நானே கூட அந்த […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

ஈடு செய்ய இயலாத இழப்பு

அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]

Categories
கருத்து தமிழ்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா? – 02

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க. பன்றி இறைச்சியைப்பற்றி பேசி கட்டுரையை முடிந்திருந்தோம்.அதாவது பன்றி இறைச்சி என்பது இஸ்லாமிய மதத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அந்த பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்த வெடிகளின் திரிகளை வாயில் கடிக்க வேண்டிய கட்டாயம் வந்த காரணத்தால் தான் சிப்பாய் கலகம் ஏற்பட்டது என்றும் பரவராக அறியப்பட்ட ஒன்று. ஆனால் ஏன்? ஆடு 🐐 மாடுகளின் 🐮 மீது இல்லாத இரக்கம் பன்றிகளின் 🐷 மீது மட்டும் எதற்காக? நான் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா?

இறைச்சி. விடுமுறை நாட்கள் மற்றும் விருந்து என்றாலே பல மனிதர்களின் முதல் தேர்வு இறைச்சி தான். இவற்றின் பல வகைகளையும், இவற்றை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். சிக்கன் மற்றும் மீன் இறைச்சி வகைகள் என்றால் பெரும்பாலான இறைச்சி பிரியர்களும் சமரசமாக ஏற்றுக் கொள்வார்கள். மட்டன் இறைச்சியை ஒரு சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சிகப்பு இறைச்சி உடலில் இரத்தக் கொதிப்பு அதிகமாகக் காரணமாகக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது அவர்களால். மட்டன் எனப்படும் ஆட்டிறைச்சியில் […]