Categories
தற்கால நிகழ்வுகள்

இ(து)ன்பச் சுற்றுலா!

இரு நண்பர்களுக்கிடையிலான உரையாடல். நபர் 1: என்ன மச்சான் வெயில் இந்தப் பொள பொளக்குது.நபர் 2: ஆமா, மச்சான்.இப்பத்தான் சித்திரை பிறந்திருக்கு.இப்பவே வெயில் இப்படி இருக்குனா இன்னும் அக்னி வெயில்லாம் வரப்ப நம்ம உசுரோட இருப்போமானே தெரியலியே மச்சான். நபர் 1: ஆமாடா இதுல இந்த சனியன் புடிச்ச டிராபிக் வேற. ச்சேய். காலைல நல்லா குளிச்சி மொழுகி பளபளனு வேலைக்குக் கிளம்பினா, வேலைக்குப் போயி சேரக்குள்ள எம் மூஞ்சியே எனக்கே அடையாளம் தெரியாத போயிடுது மச்சான். […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பழைய கசப்பான ரயில் பயண அனுபவம்.

வாழ்வில் சில நேரங்களில் நாம் யோசிக்காமல், ஆராயாமல் செய்யும் சில காரியத்தால் மறக்க முடியாத கசப்பான அனுபவங்களைப் பாடமாகப் பெறுவோம். அப்படி ஒரு சம்பவம். 1 June 2022 ல் நடந்தது. இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்காக, கோவைக்கு நன்கு விடிந்து தாமதமாகப் போனால் போதுமென்று சென்னையில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயிலில் இரண்டாம் படுக்கை வசதி இருக்கை ஒன்றை முன்பதிவு செய்துவிட்டேன். திங்கட்கிழமை IRCTC குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்தேன். “Chart […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவையற்ற நுகர்வு தெருவில் தான் சேரும்.

குழம்ப வேண்டாம். நிறுத்துமிடமில்லாமல் இல்லாமல் கார் வாங்கக் கூடாது என்ற அரசாங்க நடவடிக்கை பற்றிய சிந்தனை. சமீபத்திய பகட்டுக் கட்டுரையில் நாம் பேசிய பல விஷயங்களைப் போல இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கார் வாங்குறீங்களே?அத நிறுத்த இடமிருக்கா? இந்தக் கேள்வியை அது வரை யாருமே கேட்டதில்லை. இது வரை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இவ்வளவு தான்.உங்களுக்கு சிலர் எவளோ, பான் கார்டு , ஆதார் கார்டு கொடுங்க, 0 டவுன் பேமண்ட்ல அடுத்த மாசம் கார் […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தனியார் நலனுக்காகத் தவிக்கும் மக்கள்.

தனியார் நலனுக்காகத் தவிக்கும் பொதுமக்களின் கதையைப் பார்க்கும் முன்பு நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். ஒரு பெரிய ஊரில், போக்குவரத்து நெரிசல் இருக்கும் ஊரில், ஒரு மிகப்பெரிய திரையரங்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அங்கே வந்து படம் பார்க்க மக்கள் கூட்டமாக வரப்போவது உறுதி. அந்தத் திரையரங்கம், இருக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ளை, லாபம் சம்பாதிக்க முடிவெடுத்து, தனக்கு இருந்த நிலத்தில் மொத்தமாக பெரிய அளவில் அரங்கத்தைக் கட்டி விடுகிறது. அது நல்ல திரையரங்கம் என்பதால் அங்கே […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பயணம்- போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு நன்றி

நமது கடந்த பதிவு ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளை. அதன் விளைவு, பண்டிகைகளுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது சற்று சிரரமமான காரியமாகி விட்டது. அரசுப்பேருந்துகளிலும் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. டீலக்ஸ் ரக சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் கூட, ஒரு சில மக்களுக்கு அந்தக் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டாம் என்ற எண்ணம். மகிழுந்து அதாவது கார் வைத்திருக்கும் மக்கள் ஆம்னிப் பேருந்தின் கட்டணத்தை மனதில் கொண்டு, 4 பேர் காரில் பயணித்தால், ஆம்னிப்பேருந்து கட்டணத்தை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்தின் இனிய பயண நினைவுகள்

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம். அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல. இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

சுங்கச்சாவடிகள்- மர்மச்சாவடிகளா? – கட்டண வசூலின் பின்னணி

பரனுர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த சாவடியின் கட்டண வசூலை பற்றி சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தோம். இதே கேள்வியை இன்று MP ஒருவரும் எழுப்பியிருக்கிறார் என்ற செய்தியை தொடர்ந்து இந்த கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம். சுங்கச்சாவடிகளை இயக்குவது யார்?பணம் எந்தமுறையில் வசூலிக்கப்படுகிறது?இதை யார் நிர்ணயிக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகளுக்கு இவர்களுக்குப் பணம் வசூலிக்க உரிமம் இருக்கிறது? இது போன்ற கேள்விக்கான பதில்கள் பலருக்கும் தெரிவதில்லை. நமது முந்தைய […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பண்டிகை நெரிசலால் கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம். பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான். ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை […]