Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

கலியுகக் கர்ணன். நூற்றாண்டில் ஒருவன்

இந்தக் கலியுகத்தில் இப்படியும் ஒருவரா? நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யுமா மழை என்ற பாடலின் வரிகள் இவருக்குத் தான் பொருந்துமோ? இவர் பெயர் கல்யாண சுந்தரம். ஆனால் இவர் பாலம் கல்யாண சுந்தரம் என்றே அழைக்கப்படுகிறார். பாலம் என்பது இவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் பெயர். ஊரில் ஆயிரமாயிரம் தொண்டு நிறுவனங்கள் இருக்கும் போது இவருக்கு ஏன் இவ்வளவு அதிகப்படியான விளம்பரம் என்று நினைக்கத் தோன்றலாம். அது ஏன் என்பதை அவரது கதையிலிருந்து அறிந்து […]

Categories
சினிமா நினைவுகள் மறைவு

ஒப்பற்ற அன்பாளன் மறைந்து ஓராண்டு கழிந்தது.

ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]

Categories
தற்கால நிகழ்வுகள் மறைவு

மறைந்தார் மன்மோகன் சிங்

ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்தின் இனிய பயண நினைவுகள்

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம். அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல. இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள்

என் பெயர் கமலஹாசன்

பசுந்தோல் போத்திய புலி அல்ல நான். பசுவும் அல்ல. நான் நல்லவனா? இல்லை கெட்டவவனா?இரண்டுமே அல்ல. அதை முடிவு செய்யும் உரிமையும் என்னிடமே உள்ளது. அந்த வகையில் கொஞ்சம் சிறப்பானவன் தான். இதுதான் ஒழுக்கம், இதுதான் கலாச்சாரம் என்பதைப் பின்பற்றி எப்போதும் வாழ்ந்தவனில்லை நான். என்னவோ தெரியவில்லை, என்னை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒருபோதும் தனிமனித ஒழுக்கத்தை நான் மீறியதில்லை. என் போக்கில் என் வாழ்க்கை. யாருக்காகவும் விட்டுக்கொடுத்ததே இல்லை. யாரையும் கெடுத்ததும் இல்லை. பிறரின் பேச்சுக்கு […]