Categories
சினிமா தமிழ் நினைவுகள்

பழைய பொக்கிஷ சினிமா – அந்த நாள்

நடிகர் திலகம், சிம்மக்குரலோன், சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினமான அக்டோபர் 1 ஆம் தேதியில் அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டு , அவரது புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதை அறிந்து பெருமிதம் கொள்கிறோம். சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி, பேசவும் நினைக்கவும் ஆயிரமாயிரம் விஷயங்களும், பல சினிமாக்களும் இருந்தால் கூட, இன்று நாம் காணப்போவது சிவாஜி கணேசன் அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அந்த நாள் என்ற படம் பற்றி. இன்றைய நவீன காலகட்டத்திலேயே பல […]

Categories
சினிமா தமிழ்

பழைய பொக்கிஷ திரைப்படம் – நூறாவது நாள்

1984 ல் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு த்ரில்லர் படமா என்று வியக்க வைக்கும் ஒரு தமிழ் திரைப்பட பொக்கிஷம். மணிவண்ணன் இயக்கத்தில், விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் சத்யராஜ் அவர்களின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம். கிட்டதட்ட ஒரு திகில் படத்தைப்பார்த்த உணர்வும் இந்தப்படம் பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும். இத்தாலியில் 1977ல் வெளிவந்த sette note in Nero (Seven Notes in black) என்ற திரைப்படத்தின் தழுவலாக தமிழில் நூறாவது […]

Categories
சினிமா தமிழ்

பழைய பொக்கிஷ சினிமா: அலிபாபாவும் நாற்பது திருடர்களும்

தமிழ் படங்களில், ஏன் தென்னிந்திய படங்களில் ஒரு புதிய முயற்சியாக இந்தப்படம் முழுநீள வண்ணப் படமாக வந்த முதல் படம், அலிபாபாவும் நாற்பது திருடர்களும். அதற்கு முன்பெல்லாம் கருப்பு வெள்ளை படங்கள் தான். இந்த வண்ணப்படமானது Gevacolor என்ற முறையில் படமாக்கப்பட்டது.Gevacolor என்பது பெல்ஜியத்தில் கேவர்ட் என்பவரால் உருவாக்கப்பட்ட ஓடும் படத்தை வண்ணப்படமாக்கும் உத்தி. இந்தப்படமானது இந்தியில் வந்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் ரீமேக். The Arabic Nights என்ற புத்தகத்தில் வந்த கதையை மையமாக […]

Categories
சினிமா தமிழ்

Come Back இந்தியன்

பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.

நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.

Categories
சினிமா தமிழ்

அதே கண்கள்

பழைய பொக்கிஷ சினிமா 1967 ல் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். 1967 ல் சஸ்பென்ஸ் த்ரில்லரா என்று வியப்பு ஏற்படலாம்! ஆனால் இந்தப்படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு சஸ்பென்ஸ் படமா? என்று கண்டிப்பாக வியப்பு ஏற்படும். படம் துவங்கும் முதல் காட்சியில் படத்தின் இயக்குனர் , த்ரிலோகச்சந்தர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.“தயவு செய்து படத்தின் கதையை வெளியே சொல்ல வேண்டாம்” என்று. இப்படி ஒரு புதுமை, தமிழ் சினிமாவில் அதுவரை நிகழ்ந்தது இல்லை. […]

Categories
சினிமா தமிழ்

துணிவே துணை

பழைய பொக்கிஷ சினிமா சினிமா என்றாலே கதை, திரைக்கதை, நடிப்பு, இசை என பல கூறுகளின் ஒருங்கிணைப்பு. ஆனால், சில படங்கள் ஒரே கூறின் மூலம் முத்திரை பதிக்கின்றன. இந்தப்படத்தின் கதாநாயகன் ஜெய்ஷங்கர் என்றாலும் இந்தப்படத்தின் உண்மையான கதாநாயகன் திரைக்கதை தான். பழைய படத்தில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா என்று நாம் அசந்து போகும் அளவிற்கு திரைக்கதை அமைந்த படம். ரிப்பீடட் சீக்வென்ஸ் எனப்படும் ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும் திரைக்கதை, 1976 லேயே ஒரு […]