இருபுறமும் புளிய மரம் நிழல் தந்த மதுரை ரோடு. ஆம். மதுரை வரை மட்டுமே எங்கள் உலகம். அந்த ரோடும், மதுரையோடு முடிந்து விடும் என்று எண்ணிய சிறு வயது. மெட்ராஸ் என்ற ஊர் தெரிந்தாலும். அந்த ஊருக்கு, நம்ம ஊரில் இருந்து ரோடு கிடையாது என்ற எண்ணம். மதுரை ரோடு என்றாலே பயம்.வண்டியெல்லாம் வேகமா வரும்.நிறைய பேரு ஆக்ஸிடன்ட்ல இறந்திருக்காங்க.புளிய மரத்துல பேயா இருப்பாங்கனு. ஆனா, மதுரை ரோடு தரும் பரவசம், வேற எங்கும் கிடைப்பதில்லை. […]
Tag: பயணம்
சொர்க்கமே என்றாலும்… இதுக்கப்புறம் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. என்னைப் போலவே இதை வாசிப்பவர்களுடைய எண்ணமும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று இந்நேரம் வீட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும். பாவம் அந்த வீடு தான் நம்மை விட்டுப் பிரிந்து ஏங்கிக் கிடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வீட்டிற்குத் தெரியாது, அதை விட்டுப் பிரிந்த காரணத்தால் நாம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் வாடுகிறோம், தேடுகிறோம் என்று. பிழைப்புக்காக வந்த ஊரில் கால் கடுக்கவோ, அல்லது மூளையைப் பிழியும் அளவிற்கோ […]
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம். பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான். ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை […]
அழகிய நாசிக் நகரின் அழகியலை வர்ணித்த முதல் பகுதியின் தொடர்ச்சியாக இந்த இரண்டாவது பகுதி. ஒரு ஊரில் இத்தகைய சிறப்புகள் மொத்தமும் இருப்பதைக் கண்டு வியந்து போனேன். இது ஒரு பகுதி மலை வாசஸ்தளம். கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரம் கொண்டது.நமது மாநிலத்தின் ஊட்டியில் பாதி உயரம்.ஆதலால் இங்கு ஊட்டியின் தட்பவெப்ப சூழலில் பாதியை அனுபவிக்கலாம். அடுத்தது, இந்த நகரம் கோதாவரி ஆற்றங்கரையில் உள்ளது.ஆர்ப்பரித்து ஓடும் நதியின் அழகில் மயங்கித்தான் போகிறோம். ராமாயண காவியத்தோடு மிகுந்த […]
நாசிக் நகரம், இந்திய நாட்டின் மேற்கு பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஒரு நகரம். கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளஅழகான, சிறப்பான, தெய்வீகமான, பூர்விக வரலாறு கொண்ட நகரம். மேலும் இந்தியாவின் திராட்சை நகரம், மற்றும் ஒயின் எனப்படும் திராட்சை ரசத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சிறப்பு உடையது. கிட்டதட்ட 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரமானது கடல் மட்டத்திலிருந்து 1916 அடி உயரத்தில் இருப்பதால் பகுதி மலைப்பிரதேசம் போல இனிய காலநிலை கொண்டது. இது […]
சாலையோர காதல் கதை
ஒரு சிறிய உருவகப்படுத்தப்பட்ட கற்பனை காதல் கதை. திவ்யா – அழகி, யாருக்கும் பார்த்த உடனேயே பிடித்துவிடும் அவளை. பாலாஜி- கொஞ்சம் பழமைவாதி, 90 ஸ் ஸ்டைலிலானவன். இன்னும் கூட அவனைப்பார்த்தால் 90 ஸ் பீலிங் ஒட்டிக்கொள்ளும். எங்கள் ஏரியாவின் முதல் முக்கிய சாலை வழியாக வந்து இரண்டாவது முக்கிய சாலையை கடந்து, எங்கோ சென்று மறைந்து மீண்டும் வந்த வழியே செல்வது திவ்யாவின் அன்றாட வழக்கம்.திவ்யா வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவளிடம் அப்படி ஒரு […]
உலகம் விசித்திரமானது. பல இடங்களிலும், பல விதப்பட்ட, விசித்திரமான விஷயங்கள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஒரு உணவகத்தைப்பற்றி நினைவில் கொள்ளலாம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மத்திய இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் இந்தியன் காபி ஹவுஸ் என்ற உணவகம் பற்றியது தான் இந்தப் பதிவு. அங்கே என்ன அப்படி வித்தியாசம் என்றால், என் வயதுக்கு அப்போது வாத்துக்கறியும், வாத்து முட்டையுமே வித்தியாசமானது தான். அது கேரளாவில் […]
நேற்று ஒரு சின்ன வேலையாக பெங்களூர் வரை சென்று ஒரே நாளில் சென்னை திரும்ப வேண்டியிருந்தது. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இரவு தாமதமாக புறப்படும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டால் வசதி என்று எண்ணி பெங்களூருவில் கிளம்பி, சென்னை பெரம்பூர் வழியாக பாட்னா செல்லும் SMVB – DNR SPL ரயிலில் முன்பதிவு செய்து ரயில் நிலையத்தை நோக்கி பாதிக்கு மேற்பட்ட தூரம் பயணித்த போது, யதார்த்மாக ப்ளாட்பார்ம் நம்பரும், கோச் பொஷிஷனும் சரிபார்க்கலாம் என யத்தனித்தால், […]