Categories
சினிமா

2025 பொங்கல் – கலையிழந்த திரையரங்குகள்

பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களில் புது சினிமாவும் ஒரு முக்கிய அங்கம். அதுவும் பொங்கல் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும்? தீபாவளி கூட ஒரு நாள் கூத்து தான். ஆனால் பொங்கல் அப்படியல்ல. கண்டிப்பாக குறைந்தபட்சம் 3 நாட்களாவது விடுமுறை இருக்கும் என்பதால் பொங்கலுக்கு இறங்கும் படங்கள் அதிகம். பண்டிகை வரும் முன்பே படங்கள் வெளியாகி பண்டிகைகளைத் துவங்கி வைத்த எண்ணத்தை உருவாக்கி விடும். எஸ் தலைவன் படம் முதல் நாளில் 300 கோடி வசூல், அமெரிக்காவில் ஐம்பது […]

Categories
அறிவியல் ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

தை பிறந்தால்?

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கு இன்றளவிலும் பொதுமக்களால் நம்பப்படுகிறது. விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருந்த போது, அறுவடை முடிந்து தை மாதம் அனைத்தையும் கடவுளுக்கும் சூரியனுக்கும் படைத்து வழிபட்ட பிறகு, விளைச்சலை விற்றுப் பணமாக்கி, அதன்மூலமாக வருவாய் ஈட்டுவது வழக்கம். அதனால் தான், தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொல்லாடல் வந்தது. தைப் பொங்கல் என்பது தமிழனின் சிறப்பான பண்டிகை, மாட்டுப் பொங்கல் என்பது விவசாயத்திற்கு உற்ற துணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

சுங்கச்சாவடிகள்- மர்மச்சாவடிகளா? – கட்டண வசூலின் பின்னணி

பரனுர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த சாவடியின் கட்டண வசூலை பற்றி சில மாதங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தோம். இதே கேள்வியை இன்று MP ஒருவரும் எழுப்பியிருக்கிறார் என்ற செய்தியை தொடர்ந்து இந்த கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறோம். சுங்கச்சாவடிகளை இயக்குவது யார்?பணம் எந்தமுறையில் வசூலிக்கப்படுகிறது?இதை யார் நிர்ணயிக்கிறார்கள்? எத்தனை ஆண்டுகளுக்கு இவர்களுக்குப் பணம் வசூலிக்க உரிமம் இருக்கிறது? இது போன்ற கேள்விக்கான பதில்கள் பலருக்கும் தெரிவதில்லை. நமது முந்தைய […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருவிழாக்களும், பண்டிகைகளும் – தகர்கப்படும் நற்குணங்கள்

திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]