Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

பகட்டா, உயிரா? சிந்திப்போமா?

வரவு எட்டணா, செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் குந்தணா என்ற பாடலையும், கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல என்ற பாடல்கள் வெளிவந்து பல காலம் ஆகி விட்டதால் நாமும் அதை மறந்து விட்டோம். சிக்கனம் என்ற வார்த்தை கிட்டத்தட்ட கஞ்சன் என்ற ரீதியில் கேலிக்குரிய வார்த்தையாகவே மாறிவிட்டது. ஒருவன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதைப் போல, எவ்வளவு செலவு செய்கிறான் என்பதிலும் பகட்டுப் போட்டி வந்து விட்டது. முன்பு எதிர் வீடு […]

Categories
கருத்து

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை – சோதனைகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது. இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காணாமல் போன உணவுவிலைப் பட்டியல்- சூட்சமம் என்ன?

உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும். ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்க்கை அனுபவம்: அன்பை விதைப்போம்

சமீபத்தில் வெளிவந்த மெய்யழகன் என்ற திரைப்படத்தை மக்கள் வெகுவாகப் பாராட்டியது நம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு நல்ல ஒற்றுமை எண்ணம் கொண்ட சமுதாயத்தை நமக்குக் காட்டுகிறது. ஆம். ஒரு நல்ல இராணுவ வீரனைப்பற்றிய படத்தைப் பார்த்து நாம் அனைவரும் பாராட்டுவது ஒரு நல்ல தேசப்பற்று மிக்க சமுதாயத்தைக் காட்டுவது போல, குடும்ப உறவுகள் விட்டுப் போகக்கூடாது என்ற ரீதியில் எடுக்கப்பட்ட அந்தப்படம் இத்தனை வெகுவாகப் பாராட்டப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒற்றுமையை நோக்கும் சமுதாயத்தைக் காட்டுவதாகத் தானே […]

Categories
சிறுகதை தமிழ்

வரதட்சணை- சிறுகதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு. பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள். எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது. தாம்பூலம் […]