Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

பக்தியா அல்லது பரவசப் போட்டியா?

சமீபத்திய செய்தி: திருச்செந்தூர் பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் காரணத்தால் பௌர்ணமி அன்று இரவு கடற்கரையில் யாரும் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல். இந்தச் செய்தியின் பின்புலம் என்னவென்றால், மாதந்தோறும் திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் தங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட லட்சத்தைத் தொடுகிறது. இப்படி கடற்கரையில் லட்சம் மக்கள் படுத்து உருளுவதால், காவல்துறைக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது, சுகாதார சீர்கேடு உருவாக வழிபிறக்கிறது, சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கிறது என்பதெல்லாம் மறுக்க […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஏமாற்றப்படும் ‘பக்தி’ மான்கள்.

ஔவையே! சுட்டபழம் வேண்டுமா , சுடாத பழம் வேண்டுமா என்பது பழைய முருகன் கதை! ஐயா, 30 ரூ தேங்காய் வேணுமா அல்லது 3 லட்ச ரூபாய் தேங்காய் வேணுமா என்பது ட்ரென்டிங் கதை. ஆமாம் ஒரு தேங்காய், 3 லட்சம். அப்படி என்ன விஷேசம் அதில் எத்தனை பேருக்கு சட்னி வைக்கலாம் என்பதைத்தான் பார்க்கப்போகிறோம். ஆன்மீகம், கடவுள் பக்தி என்பது மனிதனை நல்வழிப்படுத்தினால் சிறப்பு என்று சமீபத்திய கட்டுரை ஒன்றில் பார்த்தோம். (நடப்பு அதிசயம்). அதே […]