நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு […]