Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

எல்லை தாண்டி, எமனாகி நிற்கும் நுகர்வு.

நுகர்வு… நம் தேவைக்கு ஏற்றதை வாங்குவது நுகர்வு எனப்படுவது மாறி, வியாபாரிகளின் தந்திரத்தால் நம்மிடையே திணிக்கப்படுகிறது, தற்கால நுகர்வு. இன்று காலை நடந்த ஒரு சிறிய வியாபாரம். அண்ணன் வடை குடுங்கனே என்றேன் எத்தனை என்று கேட்டார் அண்ணன். ஒரு வடை போதும்னே என்றேன். தம்பி 3 பத்து ரூபா என்றார். இல்லணே, நான் ஒருத்தன்தான். ஒரு வடை போதும். ஏற்கனவே சிம்ரன் மாதிரி மெல்லிசா இருக்கேன். இதுல 3 வடை சாப்பிட்டா வெளங்கிடும் என்று விளக்கம் […]

Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]

Categories
நினைவுகள்

காணாமல் போகும் அண்ணாச்சி கடைகள்

மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அவர்களின் கேலியான பேச்சுகளும் என்றைக்குமே நினைவிலிருந்து நீங்கா இனிமை. ஒரு மளிகைக்கடை அண்ணாச்சி என்பவர் அந்த குறிப்பிட்ட பகுதியின் மாட்டுவண்டி அச்சாணி போல இருந்த காலம் மாறி இப்போது இணைய வழிப் பொருட்கள் வியாபாரத்தின் அதிகரிப்பால், அண்ணாச்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது. சிரித்து ஜனரஞ்சகமாகப் பொருட்களை வியாபாரம் செய்து, அதில் ஒரு உறவு ஏற்படுவது அண்ணாச்சிகளின் காலம். உதாரணத்திற்கு, “என்ன அண்ணாச்சி நேத்தே லிஸ்ட் குடுத்தேன், இன்னும் சாமான் போட்டு வக்கலியா?“ […]

Categories
கருத்து

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை – சோதனைகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது. இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் […]

Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காணாமல் போன உணவுவிலைப் பட்டியல்- சூட்சமம் என்ன?

உணவகங்களில் சென்று மனதிற்குப் பிடித்த மாதிரி நாவில் இனிக்கும் ருசியோடு உணவருந்தும் ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் அது பௌர்ணமி, அமாவாசை போன்ற நிகழ்வாக, அவ்வப்போது என்ற ரீதியில் இருந்தது.ஆனால் இப்போதோ வரிசையாக திறக்கப்படும் உணவகங்களையும், அதில் இருக்கும் கூட்டத்தையும் பார்க்கும் போது வீட்டில் யாரும் சமைப்பதே இல்லையோ என்ற கேள்வி தான் எழுகிறது.சரி இந்தக்கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாகக் கேட்டால் அது ஆணாதிக்கக் கேள்வி ஆகி விடும். ஆனால் வேறொரு கேள்வி என் மூளையில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பொங்கல் பயணம்- போக்குவரத்து மற்றும் காவல்துறைக்கு நன்றி

நமது கடந்த பதிவு ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளை. அதன் விளைவு, பண்டிகைகளுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது சற்று சிரரமமான காரியமாகி விட்டது. அரசுப்பேருந்துகளிலும் ரயில்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. டீலக்ஸ் ரக சிறப்புப் பேருந்துகள் இருந்தாலும் கூட, ஒரு சில மக்களுக்கு அந்தக் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டாம் என்ற எண்ணம். மகிழுந்து அதாவது கார் வைத்திருக்கும் மக்கள் ஆம்னிப் பேருந்தின் கட்டணத்தை மனதில் கொண்டு, 4 பேர் காரில் பயணித்தால், ஆம்னிப்பேருந்து கட்டணத்தை […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள்

ஆவின் மேஜிக்கில்- அரசாங்கம் செய்த மேஜிக்

ஆவின் கரீன் மேஜிக் பாலில் அரசாங்கம் செய்த மேஜிக். ஆவின் பாலில் கொழுப்பு 3% மட்டுமே இருக்கும் டபுள் டோன்டு அதாவது சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் 6% கொழுப்புடைய புல் க்ரீம் பால் வகைக்களைக் காட்டிலும், 4.5 சதவீத கொழுப்புடைய standard அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலையே பெரும்பாலான மக்களும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆவின் பச்சை என்பது அதன் அடையாளம். அதன் பெயர் ஆவின் க்ரீன் மேஜிக் என்பது. சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் 20 ரூபாய்க்குக் […]

Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]

Categories
கருத்து சினிமா தமிழ்

சினிமா-வியாபாரமா? சேவையா?

குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது. அரிதாரம் பூசி நடித்த நடிகருக்கு பல கோடிகளில் சம்பளம், சில பல பரிசுகளும் கிடைக்கிறது. படமெடுத்த இயக்குனருக்கு பல கோடி சம்பளம். மற்ற துறைகள் எப்படி இருக்கின்றன? நிலவில் கால் பதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு வெறுமனே லட்சங்களில், சம்பளமும் பாராட்டும் மட்டும். ஒரு உயிரைக்காப்பாற்ற புதுவிதமான அரிய அறுவை சிகிச்சை செய்து […]

Categories
கருத்து தமிழ் நினைவுகள்

வாழ்வில் முன்னேறுவது எப்படி- பதில் கிடைக்காது.

இந்தக் கட்டுரை ஒரு மனிதனின் கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரை.கோர்வையாக இல்லாமல் போகலாம்.ஆனால் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். இத்தனை நம்பிக்கையோடு சொல்லக் காரணம் இருக்கிறது. அந்தக் கோபம் என்னுடையது தான். அந்த மனிதன் நான்தான். சமீபத்திய பிரபல பாடல் “யார்டா அந்தப் பையன், நான்தான் அந்தப் பையன்“ என்பதைப் போல, இன்று எனக்காக ஒரு கட்டுரை. என் கோபத்தின் வெளிப்பாடாக. ஒரு நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவன் நன்கு படித்து, இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை முடித்து, சரியான […]