க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த வகையான மேம்பாலம் போக்குவரத்து மிக அதிகமான இடங்களில், வாகனங்கள் ஒரு திசையிலிருந்து இரண்டு அல்லது மூன்று திசைகளுக்கு பிரிந்து தடையில்லாமல் செல்வதற்காக ஏற்படுத்தப்படும் பாலம் . இந்தப்பாலங்கள் கீழ்க்கண்ட இந்த இலையின் வடிவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக, தேவைகளுக்கு ஏற்ப, இணைக்கும் திசைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியா, கலிபோர்னியா, மிச்சிகன், போன்ற மாநிலங்களிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரிலும் இந்த […]
Tag: நினைவுகள்
ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்! ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர் கதை தானாம்! அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்,குனிஞ்சி பார்த்தா பூமி,இடையில் அவன்தான் பாரம்.கால் நடக்க நடக்க நீளும் தூரம். மாரி செல்வராஜ் (“ஒரு ஊருல ராஜா” பாடல் வரிகள், இசை சந்தோஷ் நாராயணன்) சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சில சினிமாக்கள், புத்தகங்களைப்போல நல்ல கருத்துகளைத் தருவதாகவும், சில சினிமாக்கள் நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த நல்ல மற்றும் கசப்பான […]
ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]
நூற்றாண்டு கண்ட கலைஞர் புகழ்
தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் இவரது பங்கு எல்லையற்றது. கூட்டணி சாதுர்யம், ஆட்சியில் நற்கவனம், மற்றும் பலவகையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வல்வராகிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்றாலே நேர்மறையான விமர்சனங்களுக்கு ஈடாக எதிர்மறையான விமர்சனங்களும் இருப்பது நிதர்சனம் தான். ஆனால் நாம் இப்போது அந்த எதிர்மறை விமர்சனங்களை மறந்து அவரிடமிருந்து நாம் பெற்ற இனிய நினைவுகளை மட்டுமே சற்று ஆராயலாம். கலைஞர் என்ற பட்டம் அவரது எழுத்து அவருக்குக் கொடுத்த பரிசு. […]
ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம். இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள். பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும். வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் […]
உலகம் விசித்திரமானது. பல இடங்களிலும், பல விதப்பட்ட, விசித்திரமான விஷயங்கள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஒரு உணவகத்தைப்பற்றி நினைவில் கொள்ளலாம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மத்திய இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் இந்தியன் காபி ஹவுஸ் என்ற உணவகம் பற்றியது தான் இந்தப் பதிவு. அங்கே என்ன அப்படி வித்தியாசம் என்றால், என் வயதுக்கு அப்போது வாத்துக்கறியும், வாத்து முட்டையுமே வித்தியாசமானது தான். அது கேரளாவில் […]
updated on August 12, 2024 அன்புள்ள வாசகர்களுக்கு, இங்கு வாசித்தது உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் தளத்தை புக்மார்க் செய்யுங்கள். நினைவுகள் எப்படி பட்ட தளம்? நினைவுகள் என்பது நம் நினைவில் கொள்ள வேண்டிய சமாச்சாரங்களை பதிவு செய்யும் தளம். Journal என்ற ஆங்கில சொல்லுக்கு நேரத்தோடு பதிவிடுதல் என்று அர்த்தம். அதாவது ஒரு நாளின் நினைவுகளை, நாட்டு நடப்புகளை, பழைய செய்திகளை, இலக்கியத்தை, நமக்கென புரிந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பதிவு […]
நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]
பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.
பச்சையப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(பச்சையப்ப முதலியார்) பச்சையப்பனாக மாறிவிட்டார். கல்வி ஒரு சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தால் அந்தக்கல்விக்கு நிதியளித்த வள்ளல் பெருமானாரின் சாதி பெயரையும் மறைக்கும் அளவிற்கு ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தொன்மையான, பெருமைக்குரிய, புகழ்மிக்க கல்லூரியை, பல சினிமா படங்கள் ரவுடிகள் வளர்ப்பு மையமாகவும், கற்பழிப்புக்கு காற்றோட்டமான இடமாகவும், கஞ்சா குடிக்க ஒதுக்குப்புறமான இடமாகவும், மாறி மாறி காறி காறி துப்பித் தள்ளிவிட்டார்கள். அதன் உண்மையான தொன்மையையும், பெருமையையும் பார்த்தோமானால் இந்தக்கல்லூரி […]