Categories
கருத்து சிறுதுணுக்கு

துவண்டு விடாதே !

எத்தனை தூரமாயினும் மழைத்துளி மண்ணை அடையும். எத்தனை பள்ளம் மேடைக்கடந்தாலும் நதி ஆழியை அடையும். எத்தனை இன்னல் வந்தாலும் மனம் இறுதியில் மகிழ்ச்சி அடையும். வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் என்பது இரவு பகல் போலத்தானே? இரவின்றி பகலுக்கு ஏது மரியாதை? எப்படியும் விடியும். நமக்கும் தான். உதிக்க வேண்டியது சூரியனல்ல. பூமி தான் சூரியனைச்சுற்றி அடைய வேண்டும். சோகங்கள் வெறும்  கருமேகங்கள் போல. குளிர்ந்து மகிழ்ச்சியை மழையாகப்பொழியும். காற்று எனும் முயற்சி இருக்கும் வரை. துண்டுவிடாதே மனிதா! […]

Categories
கருத்து குட்டி கதை பாடல்

வாழ நினைத்தால் வாழலாம்..

மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது? துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது. அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும். ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக்கடலும் சோலையாகும் ஆசை […]

Categories
விளையாட்டு

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி

சபாஷ் இந்திய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் பிடிக்காத ஆட்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..ஆத்மார்த்தமாக இல்லாவிட்டாலும், எல்லாரும் பார்ப்பதால் நானும் பார்ப்பேன் என்றும் கூட இன்று பலரும் கிரிக்கெட் ரசிகிர்களாகி விட்டனர். மேலும் பல வகையான பொது ஜனத்தை இருக்கும் வகையில் இன்று கலர்கலரான கிரிக்கெட்டுகளும் வந்து கலைகட்டுகின்றன. எத்தனை பாஸ்ட்புட் வகை கிரிக்கெட் கள் வந்தாலும் , இந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனென்றால் 90 களின் […]

Categories
ஆன்மீகம்

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு ஓடி, ஓடியே தரிசனம் செய்யும் ஒரு பாரம்பரிய முறை. இப்போது நடந்தோ ,ஓடியோ தரிசிக்க முடியாதவர்கள், இருசக்கர வாகனங்களிலோ, பெரிய வாகனங்களிலோ சென்று தரிசிப்பதையும் வழக்கமாக்கி விட்டனர். இந்த சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முந்தைய நாள் துவங்கி, சிவராத்திரி அன்று முடிவடைகிறது.சரியாக 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 110 கிமீ நடந்தோ அல்லது ஓடியோ பயணித்து இந்த பணிரெண்டு சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள். இந்த ஓட்டத்தின் போது […]

Categories
ஆன்மீகம்

அதிசயங்களா நிகழ்கிறது திருச்செந்தூரில்?

சமீபத்திய காலத்தில் திருச்செந்தூர் கடலில் இருந்து,தினசரி ஏதாவது ஒரு கல்வெட்டு அல்லது சிலை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. தினசரி என்றால் நித்தமும் அல்ல, அவ்வப்போது ஏதாவது ஒன்று வெளிப்படுகிறது. காரணம் கடல் அரிப்பு. இந்த கடல் அரிப்பு காரணமாக ஏற்கனவே கடல் வெளியில் கிடந்து மறைந்து போன தேவையற்ற பொருட்கள் ஒவ்வொன்றாக வெளியேறுகிறது. ஆமாம். முன்பு கோவில் புணரமைக்கப்பட்ட போதோ, சீரமைக்கப்பட்ட போதோ ஏதோ ஒரு கல்வெட்டு எழுதப்பட்டு, பிறகு அது உபயோகப்படுத்தப்படாத காரணத்தால் கடற்கரையிலேயே […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கடவுள் இருக்காரா ? இல்லையா?

கடவுள் நம்பிக்கை. தெய்வத்தால் ஆகாத காரியமும் கடுமையான முயற்சியால் கைகூடும் என்பது வள்ளுவன் வாக்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பகுத்தறிவு என்பது என்ன சொல்கிறது? சாமியும் இல்ல பூதமும் இல்ல. கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம், மதியால் விதியை வெல்லலாம். இதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சந்தேகம் எழுகிறது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்டுக்கச்சேரியை பார்க்க வருபவனுக்கு உட்கார கூட இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு திரும்பி செல்லும் சூழல் வரும்போது, […]