Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]

Categories
சினிமா

யாரு படம் ஓடினாலும், ஹீரோ நாங்கதான்

தமிழ் சினிமாவில் எப்போதுமே இருபெரும் நடிகர்கள் மிகப்பிரபலமாகக் கோலோச்சுவார்கள். அவர்களின் ரசிகர்களுக்கிடையிலும் வாய்ச் சண்டையில் துவங்கி கைகலப்பு வரையெல்லாம் நிகழும். அப்படி முந்தைய கருப்பு வெள்ளை காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறையில்ரஜினி- கமல். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் இடத்தில் தற்போது கோலோச்சும் இரு துருவங்கள் விஜய்- அஜித். முந்தையவர்கள் காலத்தை விட இவர்கள் காலத்தில் இணைய வளர்ச்சி காரணமாக இவர்களது ரசிகர்களுக்கிடையே வாய்க்காதகராறு சிறிதே அதிகம் தான். இவர்கள் படம் நேரடியாக மோதிக்கொண்டாலும் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
கருத்து சினிமா தமிழ்

சினிமா-வியாபாரமா? சேவையா?

குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது. அரிதாரம் பூசி நடித்த நடிகருக்கு பல கோடிகளில் சம்பளம், சில பல பரிசுகளும் கிடைக்கிறது. படமெடுத்த இயக்குனருக்கு பல கோடி சம்பளம். மற்ற துறைகள் எப்படி இருக்கின்றன? நிலவில் கால் பதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு வெறுமனே லட்சங்களில், சம்பளமும் பாராட்டும் மட்டும். ஒரு உயிரைக்காப்பாற்ற புதுவிதமான அரிய அறுவை சிகிச்சை செய்து […]

Categories
சினிமா தமிழ் நினைவுகள் மறைவு

கலை வணக்கம்- திரு.டெல்லி கணேஷ்.

நடிகர் டெல்லி கணேஷ். நாடக சபை முதல் இன்றைய வெப் சீரிஸ், அதாவது இணையத் தொடர் வரை நடித்த ஒரு மகா நடிகர். இவர் வெறும் நடிகர் மட்டுமல்லாது, சில படங்களில் பிண்ணனி குரலும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகர் என்பதைத் தாண்டி, நடிக்க வருவதற்கு முன்பு இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார் என்பது கூடுதல் அதிசயத் தகவல். இவர் எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் பிறந்தவர் என்பது மனதிற்கு நெருக்கமான செய்தி. பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே இவரது படங்களைப் […]