Categories
சினிமா தமிழ்

திரைவிமர்சனம்: பிரதர் – நேற்று போட்ட மசால் வடை

தீபாவளி போட்டியாக களமிறங்கிய 4 படங்களில் 2 படங்கள் தரமானதாகவும், இரண்டு படங்கள் சுமார் ரகமாகவும் வந்திருக்கின்றன. அப்படியான ஒரு சுமார் ரகப் படம் தான் ஜெயம் ரவி நடிப்பில் வந்துள்ள பிரதர் திரைப்படம். இயக்குனர் திரு.ராஜேஷ் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இயக்குனர் ராஜேஷ் அவர்களின் படம் பற்றி மக்கள் கொண்டிருக்கும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவே இந்தப்படமும் அமைந்துள்ளது. க்ளைமாக்ஸ்ல் துவங்கி பின்னோக்கிப் பயணித்து இந்நாளில் வந்து நிற்கும் கதை. கதாநாயகன் தப்பானவாகப் பார்க்கப்பட்டு பிறகு அவனை அவனே […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பண்டிகை நெரிசலால் கிழிந்து தொங்கும் கிளாம்பாக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நேற்று என்னுடைய உறவுக்கார மாணவி ஒருத்தரை ஊருக்கு வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இது எனக்கு கிளாம்பாக்கத்தில் கிட்டத்தட்ட நான்காவது அனுபவம். பழைய மூன்று அனுபவங்களும் சாதாரண நாட்களில் இருந்த காரணத்தால் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலான அனுபவம் தான். ஆனால் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பு விடுமுறை கூட்டத்துடன் கண்ட அனுபவம் வழக்கமான கோயம்பேடு அனுபவமன்றி வேறல்ல. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த காரணத்தால், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் வரைக்கும் மாலை 7 மணி வரை […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருவிழாக்களும், பண்டிகைகளும் – தகர்கப்படும் நற்குணங்கள்

திருவிழாக்கள் மிகவும் அழகாகத் தான் இருந்தது,காவல்துறை நண்பர்கள் வேடிக்கை மட்டும் பார்த்த காலம் வரை! ஜாதி என்றார்கள், கலவரம் என்றார்கள்,காவல்துறை உண்மையிலேயே காவல் காக்கும் நிலை வந்தது! அம்பலக்காரர்கள் மட்டும் சூழ்ந்து காக்க வேண்டிய கடவுள் காவல்துறையால் வளைத்துக் காக்கப்பட்டார்! இரவு 1 மணிக்கு, ஏம்ப்பா மணி ஒண்ணுதானயா இன்னொரு பாட்டு போடுயா என்ற வாசகம் ஒலித்தது சிறிது காலத்திற்கு முன்! இப்போதோ “இந்தாங்கப்பா உங்கள பத்து மணியோட நிகழ்ச்சிய முடிக்கச் சொன்னோம்ல?மணி 10.30 ஆகுது, இன்னும் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]