சினிமா மற்றும் ஆன்மிகம் தான் இன்று கோடிகளில் பணம் கொழிக்கும் தொழில்துறை அல்லாத இரு துறைகள் என்பது மறுக்க முடியாத உண்மை. சினிமா ஆவது பல கோடிகளில் செலவு செய்து பல மனிதர்களின் உழைப்பில் உருவாகி திரையில் ஓடி மக்கள் மனதைக்கவர்ந்தால் தான் வெற்றியும் பணமும். ஆன்மீகம் அப்படி இல்லை. பழனிக்குச் சென்றால் பயனுண்டு, திருப்பதி சென்றால் திருப்பமுண்டு, ஐயப்பனைக்கண்டால் ஆனந்தமுண்டு என்று நம்பி அங்கே சென்று அழுது புரண்டு தங்கள் பிரார்த்தனைகளைக் கொட்டும் எத்தனை பக்தர்களுக்கு […]
Tag: தற்கால நிகழ்வுகள்
இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.
பார்க்கலாம் இந்த இந்தியன் நம் நினைவுகளில் குடியிருக்கும் அந்தப்பழைய இந்தியனுக்கு ஈடு கொடுப்பாரா என்று.
நினைவுகள் வாசகர்களோடு இந்தியனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு யாம் பெற்ற அந்த சிறிய மனசந்தோஷத்தை நீவிரும் பெற விரும்புகிறோம்.
மெட்ராஸ்ல லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..? நவநாகரீக சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறிய எனக்கு எதிர்வீட்டில் வசிப்பவர், ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அலுவலகத்தில் பணி நேரத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் அந்த குடியிருப்பிலும். தண்ணீர் மின்விசைப்பம்புகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது. சுவிட்ச் எல்லோருக்கும் பொதுவாக வெளியே இருந்தாலும் கூட, தண்ணீர் தேவை என்றால் அவரிடம் சொல்லியே சுவிட்ச் போட வேண்டும்.அந்த குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் கூட ஒரு ஒழுக்கமான பராமரிப்பு […]
கில்லர் சாராயம்
கள்ளச்சாராயம் குடித்து உயிர்பலி. இந்த 2024 ஆம் ஆண்டிலும் கள்ளச்சாராயம் குடிக்க அவசியம் என்ன இருக்கிறது. தமிழ்நாடு என்ன சவுதி அரேபியா போல, குஜராத் போல சரக்கு கிடைக்காத இடமா? அரசாங்கமே ரேஷன் கார்டுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவார்ட்டர் என்று கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற ரீதியில் இங்கே வியாபாரம் படுஜோராக இருக்கிறது. மேலும் வட இந்திய மாநிலங்கள் போல இங்கே பணப்புழக்கம் இல்லாமலும் இல்லை. சின்ன சின்ன தொழிலாளியும் கூட சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல […]
வாகன புக்கிங் முரண்பாடுகள்
ஒரு உணவகத்துக்கு செல்கிறோம், அங்கே ஒரு தோசை 90 ரூ என பட்டியலில் இருக்கிறது. உங்களிடம் வரும் சர்வரிடம் ஒரு தோசை என்று நீங்கள் கோருகிறீர்கள். உடனே அவர், தோசை 140 ரூ என்று கூறுகிறார். ஏம்ப்பா பட்டியல் ல 90 ரூ தானே போட்டுருக்கு? நீ என்னவோ 140 ரூ சொல்ற? என்று கேட்டால், எங்க முதலாளி எங்களுக்கு சம்பளமாக சொற்ப பணம் தான் தருகிறார். நீங்கள் 140 ரூ தருவது என்றால் சாப்பிடுங்கள், இல்லாவிட்டால் […]
கறை படிந்த நீட் தேர்வு

NEET – National Eligibility Cum Entrance Test தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு. மருத்துவப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வின் வழியே தான் சேர முடியும் என்று அதிரடியாக திட்டம் வகுத்து, பல மாநிலங்களில் மாணவர்கள் தயாராகும் முன்னரே, பல எதிர்ப்புகளை மீறி திணிக்கப்பட்ட இந்தத் தேர்வு, பல மாணவர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்பதெல்லாம் நாம் அறிந்ததே. சில பல தற்கொலைகளும் கூட இதன் காரணமாக அரங்கேறியது மனதில் இன்னும் […]
தண்ணீர் பற்றாகுறையால் பனாமா கால்வாயில் என்ன சிக்கல்?