அருண், என்ஜினியரிங் முடித்த பட்டதாரி. வீட்டில் அருண் என்று தான் அழைப்பார்கள். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரன். படிக்கும் போதே கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தான் படித்த படிப்பிற்கும் மென்பொருள் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லாத காரணத்தால் அந்த வேலைக்கு செல்வதில் அருணுக்கு பெரிய உடன்பாடு இல்லை. ஆனாலும் சரியான பயிற்சி கொடுத்துதான் வேலையில் வைப்பார்கள், சம்பளமும் நல்ல சம்பளம் என்பதால் அவனுடைய அப்பா, இந்த வேலைக்கு சேர சொல்லி தனது […]
Tag: தமிழ்
இதற்கு முன் வெளியான ஆசிரியர் குறிப்பை வாசிக்க, நினைவுகளை பற்றி 01 – பதிப்பாசிரியரின் குறிப்பு செப்டம்பர் 14, 2024 அன்புள்ள வாசகர்களுக்கு, நினைவுகள் தளத்தின் முன்பக்கம் கட்டுரை வகைப்பாடுகளுடன் பிரிக்கப்பட்டு காட்டப்படுவதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். முன்பக்கத்தில் ஒவ்வொரு தலைப்பிலும் புதிய பதிவுகள் 5 அல்லது 6 மட்டுமே தென்படும். இன்று செய்த மேம்படுத்துதலுக்கு பின், ஒவ்வொரு தலைப்பையும் கிளிக் செய்தால் அந்த தலைப்பினுள் உள்ள பழைய கட்டுரைகளின் பட்டியல் வெளிப்படும். இந்த பக்கங்களையும், அதில் உள்ள […]
வாடகை வீடு என்பதை இங்கு பெரும்பாலான நடுத்தர மக்கள் கடந்து வந்திராமல் இல்லை. அதுவும் தான் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை தேடி பெருநகரங்களுக்குக் குடியேறும் இளைஞர்கள், திருமணம் ஆகும் முன்பு பேச்சிலர்களாகவும் (மணமாகாத இளைஞர்கள்) , பிறகு திருமணம் முடித்து குடும்பத்துடனும் வாடகை வீடுகளிலேயே காலம் தள்ள வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அப்படியான வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைக்குக் குடி வருபவர்ரகளிடம் காட்டும் அதிகாரத்தைப் பற்றிய எனது சில அனுபவங்களை, நினைவுகளைப் பகிர்கிறேன். பேச்சுலராக நான் […]

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற புறநானூறு நூலின் வரிகளை முன்வைக்கும் கதை. இது கற்பனை கதையோ அல்லது வாசித்த கதையோ அல்ல. நான் கண்ட சினிமாவை கதையாக்கி இந்த கருத்தையும் முன்வைக்கிறேன். பேபி என்ற சினிமா. பாரதிராஜாவின் மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்திருந்த படம். படத்தின் கதை இதுதான். மனோஜின் மனைவி தனது முதல் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை இறந்து பிறப்பதால் சற்று மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார். பெரிய பாதிப்பாக இல்லாத காரணத்தால் குணமாகி இரண்டாவது முறை […]
சமீபத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் அவர்களை, ஒரு வார இதழும், ஒரு சமூக வலைத்தளப்பக்கமும் பேட்டி எடுத்து பாராட்டி இருந்தார்கள். நாமும் ஆச்சரியத்தில் அதைக் காணலானோம் ஏன் எதற்காக என்று. அதற்கான விளக்கங்களும், மேலும் சில தகவல்களும். தங்கலான் படத்தைக் குறிப்பிடக் காரணம் அதிலுள்ள தனித்தன்மையும் உழைப்பும் தான். இந்தப்படத்தில் எல்லோரும் கோவணம் தானே கட்டியிருக்கிறார்கள், இதில் என்ன வடிவமைப்பு இருக்கிறது? இரண்டு முழம் கச்சைத் துணியை எடுத்து காலை அகற்றி குறுக்கே […]
சமூக வலைதளங்கள் இன்று பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனிதனின் வாழ்க்கைத் துணை போல, நண்பன் போல, சகோதர, சகோதரிகள் போல மாறி வரும் அவலமும்; மேலும் வருமானம் வரும், பிரபலமாக வாய்ப்பு வரும் என்று பலரும் அதில் மூழ்கி அழியும் அபாயமான சூழலும் உள்ளது. முன்பெல்லாம் முகம் பார்த்து மனிதனின் நிலையறிந்த மக்கள் இன்று டிஸ்ப்ளே பிக்சர் அதாவது முகப்புப்படம் பார்த்து, ஸ்டேடஸ் பார்த்து ஒருவன் சோகமாக இருக்கிறானா, மகிழ்ச்சியாக இருக்கிறானா என்று அறிந்து கொள்ளும் நிலை […]
இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]
இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க. பன்றி இறைச்சியைப்பற்றி பேசி கட்டுரையை முடிந்திருந்தோம்.அதாவது பன்றி இறைச்சி என்பது இஸ்லாமிய மதத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அந்த பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்த வெடிகளின் திரிகளை வாயில் கடிக்க வேண்டிய கட்டாயம் வந்த காரணத்தால் தான் சிப்பாய் கலகம் ஏற்பட்டது என்றும் பரவராக அறியப்பட்ட ஒன்று. ஆனால் ஏன்? ஆடு 🐐 மாடுகளின் 🐮 மீது இல்லாத இரக்கம் பன்றிகளின் 🐷 மீது மட்டும் எதற்காக? நான் […]
காற்றில் நஞ்சை கலந்துகாசெனும் பேயை அடைந்திட,ஓசோனில் ஓட்டை விழுந்துஓயாத இரைச்சலும் பெருகி,பூச்சியும் மாண்டொழிந்துபுல்வெளிகள் காய்ந்து கருக, ஆட்டமும் அதிகம் ஆகிஆள்பவன் நான் எனக்கருதி,ஓட்டமாய் ஓடியே மனிதன்ஒன்பதாம் கோளையும் தாண்டிட,பூமியே தனக்கென கருதிபூதமாய் மாறிய மனிதன்அத்தனை வளத்தையும் சுரண்டிமொத்தமாய் அபகரிக்க நினைத்தான். ஆர்ப்பரித்து வந்த கடல்ஆட்களை கொன்று குவித்தும்,சிலிர்த்து எழுந்த கோளதுவாய்பிளந்து கொன்று குவித்தும்,வெடித்து கிளம்பிய எரிமலைவெப்பத்தால் கருக்கி எரித்தும்திருந்தவே இல்லை மனிதன்திமிர் பிடித்ததாலே! பொறுத்துக் கொண்ட அன்னைபொங்கி விட்டாள் இன்றுகொரோனா எனும் கிருமிகொலை செய்கிறது நின்று,அகங்காரம் கொண்ட […]
பண்டைய தமிழகத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்க காலங்களிலும் தமிழை வளர்த்த புலவர்கள் பெரும் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம். அதில் நமக்கு வந்து சேர்ந்த சில கதைகளைத்தான் நாம் சற்று நினைவில் கொள்ளப் போகிறோம். “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவபெருமானையே குற்றம் சாட்டிய நக்கீரர் பெருமானை அறயாதோரும் இலர். தன் உயிரை விட தமிழ் வளர்க்கும் மூதாட்டியின் உயிரே முக்கியம் என ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்த […]