மழை எச்சரிக்கை கூத்துகள். சமீபத்தில் மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்வின் போது முன்னெச்சிரிக்கையாக போதுமான அளவு தண்ணீர் ஏற்பாடு இல்லாத காரணத்தால் உயிரிழந்த மக்களின் கதையை அறிந்து வருந்தினோம். இன்று அதே சென்னை மக்கள் உலகம் அழியும் வண்ணம் முன்னெச்சிரிக்கைக் கூத்துகளை செய்வதைக்கண்டு வியந்து இதை எழுதுகிறோம். ஆம். இன்று தற்காலிகமாக நான் ஒரு காய்கறி அங்காடிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். அங்கே சென்று பார்த்தபோது எனக்குப் பெரிய வியப்பு. முக்கிய ரகங்களில் ஒரு காய்கறியும் மிச்சமில்லை. […]
Tag: தமிழ்

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]

பயணம் மற்றும் சுற்றுலா. இன்றைய தினத்தில் பயணம் மற்றும் சுற்றுலா என்பது மிகவும் யதார்த்தமாகிப்போன ஒரு விஷயமாக உள்ளது. இந்த விதமான மக்கள் தான் பயணிக்கிறார்கள், சுற்றுலா வருகிறார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுமே பயணிக்கத் துவங்கி விட்டார்கள். அதன் விளைவு தான் எங்கு நோக்கினும், கூட்டமும், நெரிசலும், சிக்கல்களும். ஒரு காலத்தில் வெள்ளியங்கிரி மலைப்பயணம் என்பது சீண்டப்படாத மிக அரிதானதாக இருந்தது. சமூக வலைத்தளங்களின் தாக்கத்தின் காரணமாக கடந்த வருடம் லட்சக்கணக்கான ஆட்கள் […]

அரிதாகக் கிடைத்த ஒன்று அருகிலேயே இருக்க, இருக்க அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் என்பது தொலைக்காட்சிக்கும் பொருந்தும். தொலைக்காட்சி சம்பந்தமான நினைவுகளை முதல் பகுதியில் அளவளாவினோம். தொலைக்காட்சியின் மீது நான் கொண்ட அன்பை, எனது தனிப்பட்ட காதலை, என் குடும்பத்தின் மதிப்புமிக்க சொத்தைப் பற்றிய தனிப்பட்ட நினைவுகளை இந்தப்பகுதியில் பதிகிறேன். எங்கள் வீட்டில் இருந்தது ஒனிடா வகை வண்ணத் தொலைக்காட்சி, அதுவும் 20 இன்ச் அளவில். பெரும்பாலான வீடுகளில் கதவு வைத்த சாலிடர், பிபிஎல் போன்ற […]

தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடே இன்று இல்லை என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் ஒரு தெருவில் ஓரிரு வீடுகளிலோ அல்லது ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி அறையிலோ காணப்பட்ட அரிய வகை பொருள் இன்று மிகச்சாதாரண பொருளாகிப் போனது.அதிலும் அதில் ஒளிபரப்பபடும் விஷயங்களும், நேரமும் சிறிது காலத்திற்கு முந்தைய நிலையை ஒப்பிடும் போது இப்போது மிக அபிரிமிதமாகிப் போனதால் அதற்கான மரியாதை குறைந்து விட்டது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. முன்பெல்லாம் வாரம் ஒன்றோ அல்லது […]
அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]

சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி சில நேரங்களில் நம் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், ஆழமான கருத்துகளையும் பதிக்கும்.அப்படியொரு மகிழ்ச்சியும், கருத்தும் தந்த மறக்க முடியாத தமிழ் சினிமா பட்டியலில் இணைந்திருக்கிறது போன வாரம் வெளியான லப்பர் பந்து திரைப்படம். போன வாரம் வந்த படங்களில் மட்டுமல்ல, சமீப காலத்தில் வந்த படங்களுடன் ஒப்பிடும் போது மிக மிக சிறப்பான திரைப்படம் என்று போற்றக்கூடியது இந்த லப்பர் பந்து. இந்தப்படத்தின் முன்னோட்டம் பார்த்த போது , சென்னை 28 […]
கண்ணுக்குத் தெரியாமல் ஆரம்பித்து விட்ட இறுதி உலகப்போர். எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் காரணமாக வறட்சியில் வாடும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மக்களின் பசியைப் போக்குவதற்கும், வறட்சியின் சூழலை கட்டுக்குள் வைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவு நம்மை கடுமையான சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. எல் நினோ பருவநிலை மாறுதலால் பனாமா கால்வாயில் ஏற்பட்ட தண்ணீர் சிக்கலை பற்றி இந்த பக்கத்தில் எழுதியிருந்தோம். தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே என்ற நாட்டில் எல் நினோ பருவநிலை மாறுதலால் […]
கடவுள் என்பதை கட- உள் என்று பிரித்து உன் உள்ளே இருக்கும் நல்ல ஆன்மாவை உற்றுநோக்கி அது சொல்லும் வழியில் நடப்பது தான் ஆன்மீகம் என்றும், கடவுள் என்பது நம்மிலிருக்கும் நல்ல குணங்களின் பிரதிபலிப்பே எனவும் பல நேரங்களில் பல மதத்தலைவர்களாலும் விளக்கப்பட்டிருந்தாலும் கூட மனிதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இங்கே நாத்திகம் பேசும் மனிதர்கள் யாரும் கோவிலை இடிக்கவோ, கடவுளின் சிலைகளை அவமதிப்பதோ இல்லை. ஆத்திகவாதி, கடவுளின் பக்தன் என்று கூறிக்கொண்டு அன்றாடம் பக்தி […]
ஓர் அரசன் என்பவன் மக்களின் குறைகளை கேட்டு அதைக் களைந்து அவர்கள் குறைதீர்க்கும் வகையில் நல்லாட்சி தருபவனாக இருக்க வேண்டும் என்று பல இலக்கியங்களிலும் படித்திருக்கிறோம். இவ்வளவு ஏன் தனது குட்டியை தேரில் ஏற்றி சாகடித்ததற்காக, நீதி கேட்ட பசுவுக்காக தனது மகனையே தேரில் வைத்து நசிக்கிக்கொன்று நீதி காத்தமனுநீதிச்சோழனின் கதையை இன்றளவும் பெருமையாகப் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். மொத்த நாடும் தன்னுடைய சொத்து என்று ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் கொண்ட மன்னனுக்கே இப்படியான பண்புகள் […]