கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று படித்திருக்கிறோம். கம்பனின் கற்பனையையும், உவமைகளையும், படித்திறாத, பாரட்டிடாத தமிழ்ப் புலவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கம்பனின் கவித்திறனுக்கு விளக்கமாக இன்று தினசரியில் ஒரு தலையங்கம் வாசித்தேன்.அதை எல்லோருக்கும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த கட்டுரையில் இல்லலாத சில தகவல்களையும் தேடிச் சேர்த்து இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. கம்பராமாயணத்தின் பால காண்டத்தில் கோசலை நாட்டின் வளத்தைப் பற்றிய ஒரு பாடல். பொதுவாக உறங்குதல்,அதாவது தூங்குதல் என்பது சோம்பேறித்தனமாகத்தான் உவமைப்படுத்தப்படுகிறது. அதுவும் […]
