பண்டிகைகள் வந்தாலும் போதும் இந்த ஆம்னிப் பேருந்துகளுக்குக் கொண்டாட்டம் தான். பொங்கலையே நம்பியிருக்கும் கரும்பு விவசாயிகள் வாழ்க்கை விடிவதாயில்லை. மஞ்சள் விளைவிப்பனிடம் பேரம், காய்கறி விலை ஏறினால் காட்டம் காட்டும் பொதுமக்கள், இந்த ஆம்னிப் பேருந்தின் கட்டணக் கொள்ளைக்கு விடிவு காலம் வராதா என்று ஏங்கினால் மட்டும் போதாது. எப்படி தக்காளி விலை கட்டுபிடி ஆகாத காலத்தில் தக்காளியைத் தவிர்க்கிறோமோ, அதே போல முருங்கைக்காய் விலை உயரும் போது, முருங்கைக்காய் இல்லாம சாம்பார் ருசிக்காதா என்று பழகிக் […]
