Categories
தமிழ் நினைவுகள் வரலாறு

உலகின் மூத்த குடி – தொல்பொருள் சொல்லும் தமிழக வரலாறு

உலகின் மூத்தகுடி உன்னதமான எமது தமிழ்க்குடி என்று மார்தட்டிப் பெருமை பேச வேண்டிய தருணம் இது. அணுவைத் துளைத்தேழ் கடலைப்புகுத்தி என்ற வரிகளைப் படித்து விட்டு வாய்ச் சவடால் என்று சொல்லும் காலம் மறைந்து விட்டது. சிந்து சமவெளி தான், இல்லை இல்லை, ஐரோப்பியா தான், அட அதுவுமில்லை, எகிப்துதான், அப்ப சீனா என்ன தக்காளியா என்று நாகரீகத்தின் முன்னோடி நாங்கள் தான் என்று ஆளாளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு வரலாற்றை எழுதி அதை ஒரு தலைமுறை […]

Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

விடுதலை- திரை விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
இலக்கியம் குட்டி கதை தமிழ் பாடல் வரலாறு

உலகின் முன்னோடி தமிழன் – நீதிநெறி வரலாறு

தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

எல்லார்க்கும் பெய்யும் மழை -நல்லார் நினைவுகள்

மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]

Categories
தமிழ் வரலாறு

தியாகி அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]

Categories
இலக்கியம் தமிழ்

இராஜ இராஜ சோழன் – புத்தகப் பரிந்துரை

புத்தகப் பரிந்துரை. பயிற்று பதிப்பகம் வெளியிட்டுள்ள, திரு.இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜ இராஜ சோழன் புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலின் முழு வடிவமைப்பு ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம். நிழல் கீழே விழாதா?கோபுரம் ஒரே கல்லால் ஆனதா? போன்ற பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கிறது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து பல பூகம்பத்தையும் தாண்டி கம்பீரமாக நிற்க என்ன காரணம் […]

Categories
தமிழ் வரலாறு

பூலித்தேவர்- வெள்ளையர் எதிர்ப்பை முன்னெடுத்த வீரரின் வரலாறு

இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]