நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]
