எப்போதுமே மிக காட்டமாக ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் சிறிது சுவாரஸ்யம் இல்லாமல் தான் போகும். அதனால் அவ்வப்போது மகிழ்ச்சியாக, மிகப்பெரிய சுவாரஸ்யமில்லாத, ஆனால் மறக்க இயலாத ரசிக்கக் கூடியவற்றைப் பேசுவது உசிதம். இன்றைய தலைப்பு அது மாதிரியான ஒரு சின்ன மகிழ்ச்சியான, பேச்சு நிறைந்த நிகழ்வு தான். கடைசிப் பேருந்தின் பயணம் தான் அது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடைசிப் பேருந்து என்பது உண்டு. அப்படி எனக்கு மிகப் பரிட்சயமான கடைசிப் பேருந்து கோவில்பட்டி எட்டயபுரம் […]
Tag: சொந்த ஊர்
மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]
அரசுப் பேருந்தில் ஏற்பட்ட கசப்பான நினைவுகளைப் பகிர்ந்தோம். அவர்கள் மீது நாம் கொடுத்த புகாருக்கும் பதில் கிடைத்தது.போக்குவரத்துத் துறையிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்புக்கோரியதோடு, அவர்கள் இருவரையும் கண்டிப்பதாகச் சொன்னார்கள். ஒட்டுமொத்த அரசுப் போக்குவரத்தும் குறை சொல்லத்தக்க வகையில் அல்ல. இது ஒரு அருமையான பயண அனுபவம் பற்றிய பதிவு. சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊருக்கு சென்ற பிறகு குடும்பத்துடன், எதிர்பாராத விதமாக பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம்..முன்பதிவுகள் அற்ற நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் […]
மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]
சொர்க்கமே என்றாலும்… இதுக்கப்புறம் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. என்னைப் போலவே இதை வாசிப்பவர்களுடைய எண்ணமும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று இந்நேரம் வீட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும். பாவம் அந்த வீடு தான் நம்மை விட்டுப் பிரிந்து ஏங்கிக் கிடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வீட்டிற்குத் தெரியாது, அதை விட்டுப் பிரிந்த காரணத்தால் நாம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் வாடுகிறோம், தேடுகிறோம் என்று. பிழைப்புக்காக வந்த ஊரில் கால் கடுக்கவோ, அல்லது மூளையைப் பிழியும் அளவிற்கோ […]