Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

விடுதலை- திரை விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

எல்லார்க்கும் பெய்யும் மழை -நல்லார் நினைவுகள்

மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]

Categories
இலக்கியம் தமிழ்

குறளுடன் குட்டிக்கதை – உயர்ந்த சிந்தனை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருவள்ளுவர், குறள் 596 நாம் சாதிக்க நினைக்கும் காரியங்களை சிறியதாக நினைக்காமல் உயர்ந்த லட்சியங்களை சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.அது முடியுமா முடியாதா என்ற சிந்தனையை விட்டு, ஒருவேளை அது முடியாவிட்டாலும் கூட அதை நான் அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதை விளக்குகிறது இந்தக் குறள். இன்றைய சூழலில் மக்களின் மனநிலை மிகவும் குறுகிப் போனது.நம்மால் இது முடியாது, நம்மால் அது முடியாது, […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் – வைஷ்ணோ தேவி

திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து வழிபடும் தலமான மாதா வைஷ்ணோ தேவியின் தலத்தைப் பற்றி வாசித்து, சிந்தித்து, நன்மை அடையலாம் என்ற நோக்கில் இந்த கட்டுரை. ஆண்டுதோறும் கிட்டதட்ட 8 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக தகவல். மாதா வைஷ்ணோ தேவி கோவில் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள கோவில். சக்தி வழிபாட்டிற்கு பிரபலமான இத்தலத்தின் தெய்வம் மாதா ராணி அல்லது வைஷ்ணவி தேவி போன்ற பெயர்களால் […]

Categories
குட்டி கதை தமிழ்

தெனாலிராமன் விகடகவியான கதை

அக்பருக்கு ஒரு பீர்பால் போல, நமது நாட்டில் கிருஷ்ணதேவ ராயரின் சபையை அலங்கரித்த தெனாலி ராமன் சிறப்பு. விகடகவி என்ற பட்டம் பெற்ற தெனாலி ராமனுக்கு ஏது அத்தகைய அறிவு, எவ்வாறு அப்படி பட்டம் பெற்றார் என்று சினிமா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் கதையின்படி மிகவும் வறுமையிலிருக்கும் தெனாலி ராமன் காளியிடம் கடுமையான வேண்டுதலில் இருந்து வரம் பெற்று அந்தப் பட்டத்தையும், கிருஷண் தேவராயரின் அன்பையும் பெறுகிறார். இதற்கு […]

Categories
ஆன்மீகம் தமிழ்

அறிவோம் ஆன்மீக தகவல் -திருக்குறுங்குடியின் கோவில்கள்

அறிவோம்- ஹரி ஓம்.இந்து மதத்தின் இரு முக்கிய பிரிவுகளான சைவமும், வைணவமும், அதாவது பெருமாள் சன்னதியும், சிவன் சன்னதியும் ஒருசேர இருக்கும் கோவில்கள் அரிது தான். அப்படி ஒரு தலம் தான் திருக்குறுங்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள 1300 ஆண்டுகள் பழமையான அழகிய நம்பிராயர் தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது. திருக்குறுங்குடி என்ற கிராமம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் என்ற ஊருக்கு அருகே, மகேந்திரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் […]

Categories
ஆன்மீகம் தமிழ்

கட்டிட கலை அதிசயம்: தஞ்சை பெரிய கோவில்

உலகின் எட்டாவது அதிசயமாக தகுதியானதென போற்றப்படும் தமிழனின் பெருமையைப்பரைசாற்றும் கட்டிடக்கலையமைப்பைக் கொண்ட மிகப்பெருமையான தஞ்சை பெரியகோவிலைப்பற்றி சிறிது விளக்கமளிக்க நினைவுகள் பக்கமும் பெருமை கொள்கிறது.

Categories
கருத்து குட்டி கதை தமிழ்

குருபக்தி, குட்டி கதைகள்

குருபக்தியை நினைவுறுத்தும் விதமாக சிறுகதைகளை பெரியவர்கள் சொல்வதுண்டு. நினைவுகள் வாசகர்களோடு அப்படியான இரு கதைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.

Categories
சினிமா தமிழ் வரலாறு

Is Paris burning?

இந்த வார்த்தைகளுக்கு ஒரு செவி வழிக்கதை உண்டு.
அதில்லாமல், இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும், ஒரு சினிமாவும் வந்திருக்கிறது. அதுவும் ப்ரெஞ்சில் வெளியான மிகப்பிரபலமான திரைப்படங்களுள் ஒன்று.

Categories
கருத்து தமிழ்

கருத்து: கற்பனை உலகின் திறவுகோல், வாசிப்பு

ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.

அது நமது கற்பனைத்திறன்.