அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயால் 2 லட்சத்திற்கும் மேலானோர் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகப் பரவி வரும் தீயினால் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும், இழப்பிற்கான சரியான கணக்கீடு செய்ய பல நாட்களாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மே 2024 முதல் இந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், வரலாறு காணாத 80 மைல் வேக காற்றாலும் உருவாகிய இந்த […]
Tag: செய்தி
ஒரு குடிமகனின் கருணை மனு.
இப்படியும் ஒரு நிகழ்வு. அந்த நிகழ்விலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கட்டுரை. ஒரு கிராம மக்கள் எழுதும் மனு. ஐயா, வணக்கம். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று சொல்லத்தான் விருப்பம். ஆனால் எங்கள் கிராமத்திற்கே ஒளி தந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை திருடிய அந்த இந்தியனைக் காவல்துறையோ, அரசோ கண்டுபிடித்திருந்தால் பெருமையோடு சொல்லியிருப்பேன், “நான் இந்தியன்” என்று. சரி போனால் போகட்டும், ட்ரான்ஸ்பார்மரைத் திருடியவனைப் பிறகு பார்க்கலாம். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் மூலமாக மின்சாரம் பெற்ற கிராமத்தைப் பார்க்கலாம் […]
நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]
மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]
தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை. ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம். உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள். உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.“கொலை பன்றவன், கொள்ளை […]
மறைந்தார் மன்மோகன் சிங்
ஒவ்வொரு இந்தியரும் மறக்க முடியாத டிசம்பர் 26 ஆம் தேதியில் இன்னொரு துயரச் செய்தி. நம் அனைவருக்கும் விருப்பமான நல்லதொரு மனிதன். அமைதியான, அற்புதமான மனிதன் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் மறைந்தார். இவர் பிரதமர் என்ற பதவியை அடையும் முன்பாகவே, நிதியமைச்சராக, பொருளாதார நிபுணராக நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இந்தியப் பொருளாதார சீரமைப்பிற்கு வழிவகுத்துள்ளார். இவரது தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை இந்தியாவை […]
பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது. ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார். இப்போது நீங்கள் […]
பேராசை பெருநஷ்டம் இதனை விளக்க வழக்கமாக சொல்லப்படும் கதைகளில் முன்னொரு காலத்தில் ஒரு வியாபாரி இருந்தார் என்றும், முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் வளர்ந்த தங்க முட்டையிடும் வாத்து என்றும் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் இதை விளக்குவதற்கு முன்னொரு காலக் கதை எல்லாம் தேவையில்லை. தினம் தினம் செய்திகளில் பேராசையால் பெருநஷ்டமடைந்த பல மக்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு்தான் இருக்கிறோம். ஆன்லைன் மோசடி, வேலை வாங்கித் தருவதாக மோசடி, பங்கு பரிவர்த்தனை முதலீடு […]
ஆவின் கரீன் மேஜிக் பாலில் அரசாங்கம் செய்த மேஜிக். ஆவின் பாலில் கொழுப்பு 3% மட்டுமே இருக்கும் டபுள் டோன்டு அதாவது சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் 6% கொழுப்புடைய புல் க்ரீம் பால் வகைக்களைக் காட்டிலும், 4.5 சதவீத கொழுப்புடைய standard அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலையே பெரும்பாலான மக்களும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆவின் பச்சை என்பது அதன் அடையாளம். அதன் பெயர் ஆவின் க்ரீன் மேஜிக் என்பது. சமன்படுத்தப்பட்ட பால் 1/2 லிட்டர் 20 ரூபாய்க்குக் […]
மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]