Categories
தமிழ் வரலாறு

தியாகி அஞ்சலையம்மாள்

அஞ்சலையம்மாள். தவெக மாநாட்டுத் திடலில் காமராஜர், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார் போன்ற தலைவர்களோடு கம்பீரமாக நிற்கும் அஞ்சலையம்மாள். இது யார் என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சில காலத்திற்கு முன்பே பள்ளிப் புத்தகங்களில் இவரைப்பற்றிய குறிப்புகள் பாடமாக இணைக்கப்பட்டது. இன்று நான் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது இந்தக் கேள்வி எழாமல் இல்லை. யார் இந்த அஞ்சலையம்மாள் என்று. இவர் யாரென்று பார்க்கலாமா? முதலில் இவர் பெற்ற பெரும்புகழை ஆராயலாம். சில காலத்திற்கு முன்பு […]

Categories
தமிழ் வரலாறு

பூலித்தேவர்- வெள்ளையர் எதிர்ப்பை முன்னெடுத்த வீரரின் வரலாறு

இந்திய சுதந்திரப்போர் வேட்கையை முதலில் தூண்டிய ஒரு வீரனை சற்று நினைவில் கொள்ளலாம். இது வேலூர் சிப்பாய் கலகத்திற்கெல்லாம் முன்னோடியாக 1751 லேயே வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரனின் கதை. இன்றைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் என்ற ஊரை தலையிடமாகக் கொண்ட பாளையத்தின் அரசன் பூலித்தேவனை சற்றே நினைவில் கொள்ளலாம். நெற்கட்டான் செவல் மருவி நெற்கட்டும்செவல் என அர்த்தமே மாறி நிற்கிறது. அதையும் கட்டுரையில் பார்க்கலாம். முதலில் பாளையத்தின் வரலாறு. பூழி நாடு:1378 […]

Categories
இலக்கியம் கருத்து தமிழ்

சுதந்திர தின கேள்வி – நாட்டுக்கு என்ன தேவை?

பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]

Categories
தமிழ் வரலாறு

சுதந்திர போராட்ட சுவடுகள் – ஜாலியன்வாலா பாக்

78 ஆவது சுதந்திர தினத்திலே அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நமது சுதந்திரத்திற்கு காரணமான தியாகங்களை ஒரு முறை நினைத்துப் பெருமிதம் கொள்வோம். இந்த சுதந்திரம் எத்தனையோ இன்னல்களைத்தாண்டி நமக்குக் கிடைத்தது. அப்படி சுதந்திரத்திற்காக நடந்த பல சம்பவங்களில் நம் நினைவிலிருந்து நீங்காத சம்பவம் ஜாலியன்வாலாபாக் படுகொலை. அதை நாம் இந்த நன்னாளில் ஒருமுறை நினைவில் கொண்டு அதற்கான சந்தர்பம் அமைந்த சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரஸ் என்ற நகரிலுள்ள ஜாலியன் […]

Categories
தமிழ் வரலாறு

வரலாற்று விழுதுகள்: வேலூர் சிப்பாய் கிளர்ச்சி

அடக்குமுறைகளும், அதற்கு எதிரான கிளர்ச்சிகளும் காலம் காலமாக நிகழும் ஒன்றுதான். இதில் முக்கியமாக குறிக்கத்தகுந்த வகையில் நிகழ்ந்த சம்பவம் வேலூர் சிப்பாய் கிளர்ச்சி. 1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கிளர்ச்சி, பின்நாளில் 1857 ல் நிகழ்ந்த கிளர்ச்சியின் முன்னோடி. ஆங்கிலேய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள், தமது சமயக்குறியீடுகளான விபூதி, நாமம் போன்றவற்றை அணியக்கூடாது எனவும், கிர்தா வை எடுத்து விட வேண்டும் எனவும், இராணுவ அதிகாரி வற்புறுத்திய காரணத்தாலும், […]