Categories
சினிமா

குடும்பஸ்தன்- திரை விமர்சனம்

சில நேரங்களில் நாம் கறி எடுத்துப் பக்குவம் பார்த்து, பல மசாலாவகைகளையும் சேர்த்து சேர்த்து சமைக்கும் உணவை விட, சும்மா 2 வெங்காயம், 2 தக்காளி போட்டு செய்த உணவு அட்டகாசமாக அமைந்துவிடும். அதுபோலத்தான் எதுவுமே அலட்டிக்கொள்ளாமல்,பெரிய நடிகர்கள், மிகப்பெரிய சுவாரஸ்யமான கதைக்களம், என்று எதுவுமே இல்லாமல் நமது அன்றாட வாழ்க்கையை நமக்கே படமெடுத்துக்காட்டி, இப்படித்தான்டா நம்ம வாழ்க்கை எல்லாம் சிரிப்பா சிரிக்குதுன்னு படம் முழுக்க சிரிப்பா சிரிக்க வச்சு, இறுதியில், என்றாவது ஒரு நாள் எல்லாம் […]

Categories
சினிமா

மத கஜ ராஜா- விமர்சனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படங்கள் எதுவும் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பதை நாம் ஏற்கனவே பேசியிருந்தோம். இருந்தாலும் ஒரு சினிமா ரசிகனாக பொங்கல் படங்களை பார்க்காமலா விடப்போகிறோம். அந்த வரிசையில் பொங்கலுக்கு வெளியான படங்களில் மிகவும் பாவப்பட்ட படமான மதகஜராஜாவைப் பார்த்தாயிற்று. கிட்டத்தட்ட 12 வருடங்களாக பெட்டியில் அடைபட்டுக்கிடந்த சினிமா இன்று திரையரங்குகளில் இன்றைய பொங்கல் படத்திற்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே நமக்குப் புரிய வைக்கிறது, இப்போதைய பொங்கல் படங்கள் எவ்வளவு மோசம் என்று. இப்போதைய […]

Categories
நினைவுகள்

கடைசிப் பேருந்து.

எப்போதுமே மிக காட்டமாக ஏதாவது கருத்து சொல்லிக்கொண்டே இருந்தாலும் சிறிது சுவாரஸ்யம் இல்லாமல் தான் போகும். அதனால் அவ்வப்போது மகிழ்ச்சியாக, மிகப்பெரிய சுவாரஸ்யமில்லாத, ஆனால் மறக்க இயலாத ரசிக்கக் கூடியவற்றைப் பேசுவது உசிதம். இன்றைய தலைப்பு அது மாதிரியான ஒரு சின்ன மகிழ்ச்சியான, பேச்சு நிறைந்த நிகழ்வு தான். கடைசிப் பேருந்தின் பயணம் தான் அது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கடைசிப் பேருந்து என்பது உண்டு. அப்படி எனக்கு மிகப் பரிட்சயமான கடைசிப் பேருந்து கோவில்பட்டி எட்டயபுரம் […]

Categories
குட்டி கதை தமிழ்

நம்ம வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்குனு தோணுதா?இதப்படிங்க முதல்ல.

கடவுள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் மனிதர்களைப் படைக்கிறார். ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை படைக்கப்பட்டவுடன் எல்லாரையும் பூலோகம் அனுப்ப திட்டம் தயார் ஆகிறது. பூலோகம் போகும் முன் கடவுளின் ஏற்பாட்டோடு, ஒரு விருந்தும் தயார் ஆகிறது. மனிதர்களிடம் சொல்லப்படுகிறது.“மனிதர்களே, நீங்கள் பூலோகம் செல்லவிருப்பதால் இங்கே வழி அனுப்பும் விருந்து ஒன்று வைக்கப்படும், சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த அறையில் கடவுள் உங்களை ஆசி கூறி வழி அனுப்புவார். அனைவரும் விரைவாக சாப்பிட்டு வாருங்கள்” என… உடல் படைக்கப்பட்டவுடன், உச்சகட்ட […]