தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடே இன்று இல்லை என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் ஒரு தெருவில் ஓரிரு வீடுகளிலோ அல்லது ஊரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொலைக்காட்சி அறையிலோ காணப்பட்ட அரிய வகை பொருள் இன்று மிகச்சாதாரண பொருளாகிப் போனது.அதிலும் அதில் ஒளிபரப்பபடும் விஷயங்களும், நேரமும் சிறிது காலத்திற்கு முந்தைய நிலையை ஒப்பிடும் போது இப்போது மிக அபிரிமிதமாகிப் போனதால் அதற்கான மரியாதை குறைந்து விட்டது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. முன்பெல்லாம் வாரம் ஒன்றோ அல்லது […]
