Categories
ஆன்மீகம்

சிவாலய ஓட்டம்

சிவாலய ஓட்டம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு ஓடி, ஓடியே தரிசனம் செய்யும் ஒரு பாரம்பரிய முறை. இப்போது நடந்தோ ,ஓடியோ தரிசிக்க முடியாதவர்கள், இருசக்கர வாகனங்களிலோ, பெரிய வாகனங்களிலோ சென்று தரிசிப்பதையும் வழக்கமாக்கி விட்டனர். இந்த சிவாலய ஓட்டம் சிவராத்திரிக்கு முந்தைய நாள் துவங்கி, சிவராத்திரி அன்று முடிவடைகிறது.சரியாக 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 110 கிமீ நடந்தோ அல்லது ஓடியோ பயணித்து இந்த பணிரெண்டு சிவாலயங்களையும் தரிசிக்கிறார்கள். இந்த ஓட்டத்தின் போது […]

Categories
ஆன்மீகம் தற்கால நிகழ்வுகள்

மகா கும்பமேளா- விமர்சனங்களின் தொகுப்பு

நவீன வளர்ச்சி, நவீன முன்னேற்றம், என்பது போல, நவீன மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை தான். உத்திரப்பிரதேச மாநிலம் பிராயக்ராஜ்ல் தற்போது நிகழ்ந்து வரும் மகா கும்பமேளாவில் நவீன மூடநம்பிக்கை ஒன்று பிறந்துள்ளது ஆச்சரியத்தையும், சிரிப்பையும் வரவழைக்கிறது. ஆமாம். மகா கும்பமேளாவில் குறிப்பிட்ட நாட்களில் நதியில் புனித நீராடுவது புனிதம், பெரும் பலன் என்று கூறப்படுகிறது. அதை நம்பி குளிக்கச் சென்று கூட்டத்தில் நசுங்கி இறந்தவர்களை நாம் ஏற்கனவே சாடியுள்ளோம். இது மாதிரியான மூட நம்பிக்கை அவசியமா என்று. அதற்குப் […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

தேவையா இந்த அவலம்? – ஏகாதேசி நெரிசலில் பக்தர்கள் உயிரிழப்பு

நாம் அடிக்கடி விமர்சிக்கும் அதிதீவிர பக்தி, அல்லது மிதமிஞ்சிய பக்தி அல்லது விளம்பரத்திற்கான பக்தி அல்லது போட்டிக்கு பக்தி, எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அதன் விளைவு இன்று விபரீதமாகி இருக்கிறது. திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை தரிசித்தே தீருவேன் என்று கூட்டம் கூட்டமாக ஆட்டு மந்தை போல முண்டியடித்த மக்கள். மூச்சு முட்டி இதுவரை 5 பேர் இறந்திருக்கிறார்கள்.இனியும் எண்ணிக்கை கூடலாம் என்றும் சொல்லப்படுகிறது. பலர் காயமடைந்திருக்கிறார்கள், மயங்கி விழுந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறு […]

Categories
ஆன்மீகம் தகவல் தற்கால நிகழ்வுகள்

என்னங்க சார் உங்க நியாயம்? – திருச்செந்தூர் பயண அனுபவம்

மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஐயப்பனுக்கே தீட்டா? அபாய மூடநம்பிக்கையின் அடுத்த அடி.

ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடவுள் என்பதன் பொருள், […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கடவுள் இருக்காரா ? இல்லையா?

கடவுள் நம்பிக்கை. தெய்வத்தால் ஆகாத காரியமும் கடுமையான முயற்சியால் கைகூடும் என்பது வள்ளுவன் வாக்கு. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பகுத்தறிவு என்பது என்ன சொல்கிறது? சாமியும் இல்ல பூதமும் இல்ல. கடினமாக உழைத்தால் எதிலும் வெற்றி பெறலாம், மதியால் விதியை வெல்லலாம். இதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு சந்தேகம் எழுகிறது. சில ஆயிரம் ரூபாய் கொடுத்து பாட்டுக்கச்சேரியை பார்க்க வருபவனுக்கு உட்கார கூட இடம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு திரும்பி செல்லும் சூழல் வரும்போது, […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது. இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

பக்தியா அல்லது பரவசப் போட்டியா?

சமீபத்திய செய்தி: திருச்செந்தூர் பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் காரணத்தால் பௌர்ணமி அன்று இரவு கடற்கரையில் யாரும் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல். இந்தச் செய்தியின் பின்புலம் என்னவென்றால், மாதந்தோறும் திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் தங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட லட்சத்தைத் தொடுகிறது. இப்படி கடற்கரையில் லட்சம் மக்கள் படுத்து உருளுவதால், காவல்துறைக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது, சுகாதார சீர்கேடு உருவாக வழிபிறக்கிறது, சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கிறது என்பதெல்லாம் மறுக்க […]

Categories
தமிழ் நினைவுகள்

எங்கள் தெரு கோவில் கொடை நினைவுகள்

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர். 1952 ஆம் ஆண்டே பராசக்தி படத்தில் திரு.சிவாஜி கணேசன் இந்த வசனத்தைப் பேசி நடித்திருப்பார். அப்படியிருக்கும் போது 2024 ல் சொல்லவா வேண்டும். நாம் பிழைக்கச் செல்லும் ஊரில் எத்தனை சொகுசுகளும் வசதிகளும் இருந்தாலும் கூட, பிறந்த ஊர் ஒரு குட்கிராமமாயினும், அந்த பிறந்த ஊரில் இருந்த ஏதோ ஒன்றை பிழைக்கச் சென்ற ஊரில் நாம் தொலைத்தது போன்ற அனுபவம் இல்லாமல் இங்கு யாருமில்லை. அப்படி என்னுடைய மனதிற்கு […]