சொந்த ஊர் எப்போதும் சொர்க்கம் தான்.ஆனால் சில யதார்த்தம் கசக்கிறது. மருந்து போலத்தான் என்றாலும் கசப்பு கசப்பு தான். ஓடி, ஆடி புழுதியில் உருண்ட அதே தெருக்கள்… புழுதி இல்லை இப்போது, சிமெண்ட் சாலைகள். மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தில் ஏதோ ஒரு வசதியான வீட்டுத் திண்ணையில் தெருவிலுள்ள மொத்த கும்பலும் விளையாடிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்போம். மின்சாரம் வந்து தெரு விளக்குகள் ஒளிர்ந்ததும் ஊரைப் பிளக்கும் கூப்பாடு போடுவோம். கரண்டு வந்திருச்சே, கரண்டு வந்திருச்சே என்று […]
