உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருவள்ளுவர், குறள் 596 நாம் சாதிக்க நினைக்கும் காரியங்களை சிறியதாக நினைக்காமல் உயர்ந்த லட்சியங்களை சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.அது முடியுமா முடியாதா என்ற சிந்தனையை விட்டு, ஒருவேளை அது முடியாவிட்டாலும் கூட அதை நான் அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதை விளக்குகிறது இந்தக் குறள். இன்றைய சூழலில் மக்களின் மனநிலை மிகவும் குறுகிப் போனது.நம்மால் இது முடியாது, நம்மால் அது முடியாது, […]
Tag: குட்டி கதை
ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]
தெனாலிராமன் விகடகவியான கதை
அக்பருக்கு ஒரு பீர்பால் போல, நமது நாட்டில் கிருஷ்ணதேவ ராயரின் சபையை அலங்கரித்த தெனாலி ராமன் சிறப்பு. விகடகவி என்ற பட்டம் பெற்ற தெனாலி ராமனுக்கு ஏது அத்தகைய அறிவு, எவ்வாறு அப்படி பட்டம் பெற்றார் என்று சினிமா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் கதையின்படி மிகவும் வறுமையிலிருக்கும் தெனாலி ராமன் காளியிடம் கடுமையான வேண்டுதலில் இருந்து வரம் பெற்று அந்தப் பட்டத்தையும், கிருஷண் தேவராயரின் அன்பையும் பெறுகிறார். இதற்கு […]
குறளுடன் குட்டி கதை -பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ். குறள் 156, திருவள்ளுவர் அதாவது ஒருவர் செய்த தீங்குக்காக அவரை தண்டித்தவருக்கு அந்த ஒரு நாள் தான் இன்பம். ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டவருக்கு , இந்த உலகம் அழியும் வரை புகழ் உண்டாகும். இந்த திருக்குறளை நம்மாளு ஒருத்தரு கொஞ்சம் வித்தியாசமா புரிஞ்சிக்கிட்டாரு. எப்படின்னு விளக்கமா இந்தக் கதை மூலமா தெரிஞ்சிக்கோங்க. நம்மாளு விமான நிலையத்துல வேலை செய்யிற ஆளு. இந்தக்காலம் மாதிரி இல்ல, அந்தக்காலத்துல, அதாவது […]
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 305, திருவள்ளுவர் இந்த திருக்குறள் அறத்துப்பாலில், துறவறவியலில் வெகுளாமை என்ற தலைப்பில் வருகிறது. கோபத்தை கட்டுப்படுத்தாத மனிதன் அந்த கோபத்தால் தானே அழிகிறான் என்ற பொருளைக் கொண்டது. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க –தன்னை ஒருவன் காக்க விரும்பினால், அவன் சினம் ( கோபத்தை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காவாக்கால்– அப்படி கட்டுப்படுத்த இயலாத காலத்தில் தன்னையே கொல்லுஞ் சினம்– அந்த சினம் அவனையே கொன்று விடும். இதையே […]
குருபக்தி, குட்டி கதைகள்
குருபக்தியை நினைவுறுத்தும் விதமாக சிறுகதைகளை பெரியவர்கள் சொல்வதுண்டு. நினைவுகள் வாசகர்களோடு அப்படியான இரு கதைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்.
பரிமாறும் கைகள்
தமிழ்நாட்டின் இன்னும் கூட சாதி பார்க்கும் ஏதோ ஒரு ஊரின் சத்துணவு ஆயா அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவர் அந்தப்பணியை செய்ய விடாமல் ஒரு கூட்டம் தடுக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியக்கூடாத 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அந்த ஆயா கீழ்சாதி என்று அவர் சமைத்த உணவை குப்பையிலிடுகின்றனர். கலெக்டர் தலையிட்டு அந்த ஆயாதான் இனி சமைப்பார் என உறுதி ஆன பின்னர், சாதி வெறி […]