Categories
சினிமா தமிழ்

திரை விமர்சனம்: அமரன் – சொல்லி அடித்த கில்லி

தீபாவளி மெதுவாக குளித்து முடித்து பலகாரங்கள் சாப்பிட்டு, பட்டாசு வெடித்தாலும், படம் பார்த்து முடித்தால் தானே திருப்தி. தீபாவளிக்கு மறக்க முடியாத பல பெரிய படங்கள் வெளிவந்து வெற்றி அடைந்திருக்கிறது. அப்படி இந்த வருடம் சொல்லி அடிக்க வந்த படம் அமரன். வெகுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்பங்களின் தேர்வு இந்தப் படம் தான். காரணம் இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த முன்னாள் இராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதாலும், சிவகார்த்திகேயன் பல குடும்ப ரசிகர்களைத் தக்க […]

Categories
சிறுகதை தமிழ்

மகப்பேறு – சிறுகதை

வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]

Categories
சினிமா தமிழ்

மெய்யழகன் – சினிமா விமர்சனம்

தற்போதைய காலகட்டத்தில், தலையை துண்டாக வெட்டுவது, ரத்தம் தெறிக்க தெறிக்க கொலை செய்வது போன்ற படங்களை யதார்த்தமாக குடும்பத்தோடு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிட்டதட்ட 100 க்கு 70 படங்கள் அந்த வகையில் தான் வருகின்றன. அதைத் தாண்டி வரும் மீதி முப்பது படங்களிலும் கூட கல்லூரி வாழ்க்கை அல்லது காதலோ, நட்போ என்று கதையம்சம் இளைஞர்களை கவர்வதாகவே உள்ளது. குடும்ப உறவுகளை, அதன் நிகழ்வுகளை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்து விட்டது, மேலும் அப்படியான படங்கள் […]

Categories
சிறுகதை தமிழ் நினைவுகள்

ஈடு செய்ய இயலாத இழப்பு

அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]