Categories
தற்கால நிகழ்வுகள்

ஹாலிவுட் நகரை சூழ்ந்த பேரழிவு: கட்டுக்கடங்காத காட்டுத் தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயால் 2 லட்சத்திற்கும் மேலானோர் தங்கள் குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  கடந்த நான்கு நாட்களாகப் பரவி வரும் தீயினால் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும், இழப்பிற்கான சரியான கணக்கீடு செய்ய பல நாட்களாகலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  மே 2024 முதல் இந்த பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், வரலாறு காணாத 80 மைல் வேக காற்றாலும் உருவாகிய இந்த […]

Categories
அறிவியல் தகவல் தற்கால நிகழ்வுகள்

விளக்கேற்றி கைதட்ட வேளை வந்துவிட்டதா?

நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]

Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் மறைவு

எல்லார்க்கும் பெய்யும் மழை -நல்லார் நினைவுகள்

மழை. நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)எல்லார்க்கும் பெய்யும் மழை. ஔவையார், 10 மூதுரை இதைப்படித்த பருவ வயதில் எங்கள் ஊரில் ஜோராக மழை பெய்த நினைவுகள் இருக்கின்றது. மழை நாட்கள், என்பதே ஒரு தனி சுகம் தான். எப்போதும் இல்லாத ஒரு அரவணைப்பு, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து மாலை காபி முதல் இரவு உணவு வரை பல கதைகளைப் பேசிக் கொண்டு பொழுதைக் கழிப்பது என்று இன்றளவும் […]

Categories
தமிழ் நேர்காணல்

நேர்காணல் – சமூக ஆர்வலர் டாக்டர்.தியாகராஜன் அவர்களோடு ஒரு உரையாடல்

நல்லதைப் பாராட்டுவோம், பகிர்வோம் என்ற வார்த்தைகளைப் பின்பற்றி இதைப் பகிர்கிறோம். நமக்கெல்லாம் இயற்கையாகவே ஒரு குணம் உள்ளது.மிகப்பெரிய உயரத்தை அடைந்த ஒருவரின் சாதனையை மனம் விட்டுப் பாராட்டுவோம்.ஆனால் நம்மோடு இயல்பாகப் பழகி உறவாடும் எளியவர்கள் செய்யும் காரியங்களைப் பாராட்ட மனமிருக்காது. ஏனென்றால் அந்தப் பாராட்டு அவரை நம்மை விட ஒரு படி உயர்த்திவிட்டால் அவர் நம்மை விட உயர்ந்தவராகிப் போவார் என்ற காரணத்தால் தான். எப்போதும், எத்தகைய உயரத்தை அடைந்தவரும், கீழிருந்து மேல் வந்தவர் தான் என்பதை […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

பட்டாசு மட்டும் தான் மாசுபொருளா?

தீபாவளி பண்டிகை என்றாலே முக்கியமான 2 விஷயங்கள் பட்டாசும், புத்தாடைகளும் தான். அதில் ஒரு முக்கியமான விஷயம் சமீப காலங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகி வருகிறது. பட்டாசு தான் அது. பட்டாசு சுற்றுச் சூழல் மாசு.பட்டாசு வெடிக்கும் காரணத்தால் ஒரே நாளில் இவ்வளவு புகை கிளம்பியது.பட்டாசு வெடித்து முடித்த இரண்டு நாட்களுக்கு நகரம் முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது போல இருந்தது. பசுமைப் பட்டாசு, சீனப்பட்டாசு என்று பல பல விதங்களில் பட்டாசு சம்பந்தமான பேச்சு அதிகரித்துள்ளது. அதாவது பட்டாசு […]

Categories
அறிவியல் தமிழ்

காலநிலை மாற்றத்தை விளக்கும் கீலிங் வளைவு

கீலிங் வளைவு, பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் ஒரு தரவு. கரியமிலவாயு எப்படி உருவாகிறது? உலகின் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் ஆனது உயிர் வாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் முறையில் தான் நிகழ்கிறது. செடிகளும், கொடிகளும் மரங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.. பகல் நேரத்தில் மரங்கள் photosynthesis அதாவது ஒளிச்சேர்க்கையின் வாயிலாக கரியமிலவாயுவை உட்கொண்டு oxygen ஐ அதாவது உயிர்வாயுவை மரங்கள் வெளியேற்றுகிறது. கார்பனை பிரித்து தன் […]