சமூக வலைதளங்கள் இன்று பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி மனிதனின் வாழ்க்கைத் துணை போல, நண்பன் போல, சகோதர, சகோதரிகள் போல மாறி வரும் அவலமும்; மேலும் வருமானம் வரும், பிரபலமாக வாய்ப்பு வரும் என்று பலரும் அதில் மூழ்கி அழியும் அபாயமான சூழலும் உள்ளது. முன்பெல்லாம் முகம் பார்த்து மனிதனின் நிலையறிந்த மக்கள் இன்று டிஸ்ப்ளே பிக்சர் அதாவது முகப்புப்படம் பார்த்து, ஸ்டேடஸ் பார்த்து ஒருவன் சோகமாக இருக்கிறானா, மகிழ்ச்சியாக இருக்கிறானா என்று அறிந்து கொள்ளும் நிலை […]
Tag: கருத்து
காற்றில் நஞ்சை கலந்துகாசெனும் பேயை அடைந்திட,ஓசோனில் ஓட்டை விழுந்துஓயாத இரைச்சலும் பெருகி,பூச்சியும் மாண்டொழிந்துபுல்வெளிகள் காய்ந்து கருக, ஆட்டமும் அதிகம் ஆகிஆள்பவன் நான் எனக்கருதி,ஓட்டமாய் ஓடியே மனிதன்ஒன்பதாம் கோளையும் தாண்டிட,பூமியே தனக்கென கருதிபூதமாய் மாறிய மனிதன்அத்தனை வளத்தையும் சுரண்டிமொத்தமாய் அபகரிக்க நினைத்தான். ஆர்ப்பரித்து வந்த கடல்ஆட்களை கொன்று குவித்தும்,சிலிர்த்து எழுந்த கோளதுவாய்பிளந்து கொன்று குவித்தும்,வெடித்து கிளம்பிய எரிமலைவெப்பத்தால் கருக்கி எரித்தும்திருந்தவே இல்லை மனிதன்திமிர் பிடித்ததாலே! பொறுத்துக் கொண்ட அன்னைபொங்கி விட்டாள் இன்றுகொரோனா எனும் கிருமிகொலை செய்கிறது நின்று,அகங்காரம் கொண்ட […]
வாயை அசைத்தால் சத்தம் என்பது எல்லோருக்கும் வரும். வார்த்தைகளை இணைத்தால் வாக்கியம் உருவாகும். ஆனால் பேசும் பேச்சு மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கிறதா, அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா என்பதைப் பொறுத்து தான் நமது பேச்சுக்கான மரியாதை கிடைக்கிறது. சிலர் பேசுவதைக் கேட்டால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று கூடத் தோன்றும். பேசும் போது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். Dear Brothers and sisters of America என்ற வார்த்தைகள் உருவாக்கிய அந்த மகிழ்ச்சியைப்போல. சிலரது பேச்சுகள் […]
ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]
பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]
இதற்கு முன்பு வெளிவந்த கடன் எனும் பகாசூரன் வாசிக்க… சிறிது காலத்திற்கு முன்பு வரை புழக்கத்தில் இல்லாத இந்த மொபைல் அல்லது கைபேசி, இப்போது ஒரு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கிறது. தகவல் தொடர்பு முன்னேற்றம், உலகம் நம் கையில் என்று மார்தட்டிக் கொண்டாலும் அதில் பல பிரச்சினைகளும் உள்ளது. மொபைல் மனிதர்களின் நேரத்தை, குறிப்பாக நெருக்கத்தை எடுத்துக்கொள்கிறது. மொபைலுக்கு அடிமை ஆகிப்போகும் மனிதன் சக மனிதனை முகம் கொடுத்துப் […]
ஒரு செயலை செய்யும் போது அதற்கான பலன் கிடைக்காவிட்டால் சோர்வடைந்து அந்த செயலில் இருந்து பின்வாங்குதல் என்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையான ஒன்று. அப்படியான நமக்கான ஒரு முன்மாதிரி வினேஷ் போகட். இன்று இந்தியர்களின் இதயம் நொறுங்கிப்போக காரணமானவர். ஆனால் அவரும் பிறக்கும் போது நம்மைப்போன்ற ஒரு சாதாரண ஆள்தானே? மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்குத் தகுதியான ஒரே இந்தியப் பெண்மனி என்ற சாதனை புரிந்து, அடுத்த நாளே இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற வரலாறையும் […]
பிடித்த வேலையோ, பிடிக்காதவேலையோ, ஆத்மார்த்தமாக செய்ததோ அல்லது அலுவலுக்காக செய்ததோ, நேர்மையாக இருந்தார்களோ ஏமாற்றினார்களோ. எப்படி இருந்தாலும் ஒரு மனிதனின் ஆன்மா, ஆழ்மனது, ஒரு வேலையை தொடர்ந்து செய்யும் போது அதற்கு அடிமையாகி விடுகிறது.
நினைவுகளில் இருந்து நீங்காமலிருக்கும் சில விஷயங்களில் ஒன்று சாப்பாடு. சோறு தான் சார் முக்கியம் என்று வாழும் பல உன்னத ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம். நம் அனைவருக்கும் என்றோ, எங்கேயோ, எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, அது நிகழ்ச்சி விருந்தாகவோ, கோவில் திருவிழா பந்தியாகவோ அல்லது உணவக விருந்தாகவோ கூட இருந்திருக்கலாம், அது என்றும் இனிய நினைவு தான். அப்படி இங்கே பலரும் கடந்து வந்திருக்கக் கூடிய இனிய உணவு உபசாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் […]