பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]
Tag: கருத்து
ஒரு நல்ல தலைவன் என்பவன் கஷ்டம் என்று வரும்போது மக்களோடு துணை நிற்பவனே! அதாவது துணை நிற்பது என்பது வெறும் நிவாரணத்தொகை வழங்குவது, இலவச அரிசி பருப்பு, மளிகை சாமான் என்று கேவலமான நிலைக்குச் சென்று விட்டது. ஒரு கப்பல் மூழ்குகிறது என்றால் அதில் இருக்கும், ஊழியர்கள், பயணிகள் என்று முடிந்த வரை பெரும்பாலான ஆட்களைக் காப்பாற்றி விட்டு, கப்பலோடு கப்பலாக மூழ்கிப் போவதோ, அல்லது கடைசி ஆளாக தப்பித்து உயிர்பிழைப்பதோ என்று செய்பவர்தான் கப்பலின் உண்மையான […]
கலவரத் திருவிழா
கலவரமான கோவை உணவுத் திருவிழா! கோவையில் சென்ற வார இறுதி நாட்களில் கொடிசியா வளாகத்தில் உணவுத்திருவிழா என்ற விளம்பரம் மிகவும் பிரபலமாக இணையத்தில் பரவி இருந்தது. கிட்டதட்ட 499 உணவு வகைகளை வெறும் 799 ரூ கொடுத்தால் உண்டு மகிழலாம் என்றும், அது போக, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்கும் என்றும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. நாமும் கூட அந்த விளம்பரத்தைக் கண்டிருக்கக் கூடும். வெறும் 800 ரூபாயில் 499 உணவு வகைகளை உண்டு மகிழப்போகிறோம் […]
அலட்சியத்தின் விளைவு
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் […]
காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]
இருதலைக் கொள்ளி என்றால் என்ன? அதாவது இரு பக்கமும் எரியும் தீயால் கொள்ளியின் நடுவில் சிக்கிய எறும்பு தப்ப வழியின்றி மாட்டிக்கொள்வது போல துன்பம் சூழ்ந்து தப்ப வழியின்றி மாட்டிக்கொள்பவரை அப்படி உவமானமாகச் சொல்வர். சரி விஷயத்திற்கு வருவோம். நம் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட விஷயம், திமுகவின் மூடநம்பிக்கை மறுப்புக் கோட்பாடு. திமுக பெரியார் வழியைப் பின்பற்றும் கட்சி என்பதால், ஆன்மீகத்தின் பெயரில் நடக்கும் மூடநம்பிக்கைகளை அது காலங்காலமாக கடுமையாக எதிர்த்து வருகிறது. சொல்லப்போனால் இது கடவுள் […]
சமீபத்தில் நாம் அனைவரும் கேள்விப்பட்டு, சிலர் வருத்தமும், சிலர் கேலிக்கூத்தும் செய்த செய்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப், வழிகாட்டுதலின் பேரில், மகிழுந்தில் சென்ற மூவர், பாலத்திலிருந்து, மிகிழுந்து கவிழ்ந்து விழுந்து பலி. இதில் மூன்று உயிர் போய்விட்டதே எனப்பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இந்த செய்தி வெளியான இணையப்பக்கத்தில் சிரித்தும் வைத்திருக்கிறார்கள்.மூன்று உயிர் பலியானதைத் தாண்டி எதை எண்ணி சிரிக்கத் தோன்றியதோ தெரியவில்லை. வேறு சிலர் இது அந்த மாநிலத்தின் அரசியல் கட்சியின் நிர்வாகத்திறமை சரியால்லாத காரணத்தால் […]
குறை சொல்வதற்காக அல்ல. ஆனால் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். ஒரு திரைப்படம் நன்றாக ஓடுகிறது. அரிதாரம் பூசி நடித்த நடிகருக்கு பல கோடிகளில் சம்பளம், சில பல பரிசுகளும் கிடைக்கிறது. படமெடுத்த இயக்குனருக்கு பல கோடி சம்பளம். மற்ற துறைகள் எப்படி இருக்கின்றன? நிலவில் கால் பதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளுக்கு வெறுமனே லட்சங்களில், சம்பளமும் பாராட்டும் மட்டும். ஒரு உயிரைக்காப்பாற்ற புதுவிதமான அரிய அறுவை சிகிச்சை செய்து […]
ஐயப்ப பக்தர்கள் வாவர் சமாதிக்குச் சென்றுவிட்டு, தரிசனத்திற்கு வருவது தீட்டு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாதிரியான விஷயங்களைத்தான் நம் நினைவுகள் பக்கத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். நாம் என்றுமே சாமி கும்பிடுவதையோ, மாலை அணிந்து விரதம் இருக்கும் சாதாரண மற்ற பிற விஷயங்களையோ எதிர்த்தோ, கேலியாகவோ பேசியது இல்லை. திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு இருந்ததா இல்லையா என்பதே உறுதி ஆகாத முன்பு தீட்டுக் கழிக்கிறேன் என்று ஹோமம் நடத்தியதைத்தான் கேள்விக்குள்ளாக்குகிறோம். கடவுள் என்பதன் பொருள், […]
சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு? ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது. காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம். முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் […]