சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]
Tag: கதை
தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]
வித்தியாசமான கதை அம்சம் கொண்டதும், கநைகளுக்கு முக்கியத்துவம் தருவதுமான படங்கள் சமீபத்தில் தான் வருவதாகவும், பழைய படங்களில் பெரும்பாலானவை, கதாநாயகர்களுக்கு மாஸ் காட்சிகளும், சண்டையும், காதலும் என காட்சிகளைக் கொண்ட படமாகவே அமைந்ததாகவும் சினிமா ரசிகர்கள் பலரும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது மட்டுமல்ல, 80,90 களிலும் அதுமாதிரியான படங்கள் வெளிவரத்தான் செய்தன என்பதை நிரூபிக்கும் படம் தான் 1988 ல் வெளிவந்த சொல்லத் துடிக்குது மனசு திரைப்படம். நவரச நாயகன் கார்த்திக் நடித்த […]
ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு. பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள். எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது. தாம்பூலம் […]
சில கனவுகள் நம்மை உறங்க விடுவதில்லை.சில கனவுகள் தூக்கித்தில் வந்தால் கூட நம் நினைவை விட்டு அகலுவதில்லை. அப்படியான ஒரு கனவு தான், நம் கதையின் நாயகனுக்கும். கதையின் நாயகனுக்கு திருமணமாகி விட்டது.இந்த லாக் டவுன் பீரியடில் வேலை இல்லாத காரணத்தால், இரவு 3 மணி வரை விழித்து ஏதாவது படம் பார்த்து விட்டு, காலை 11 மணி வரை தூங்குகிறான். அவனது கனவில்….. கதையின் நாயகன் ராகேஷ், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது தந்தை ஓரளவுக்கு […]
வைஷ்ணவியும், கதிரவனும், காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணம் செய்தார்கள் என்று ஒற்றை வரியில் இருப்பதால், அவ்வளவு எளிதாக திருமணம் நிகழ்ந்துவிட்டதாக எண்ண வேண்டாம். எந்த காலத்திலும் பெண் பிள்ளையைப் பெற்றவர்களுக்கு மகளை நல்ல இடத்தில் கட்டிக்கொடுத்து கரை சேர்ப்பது என்பது மிகப்பெரிய சவால் தானே? ஊர் கூடி, ஆசிர்வாதம் செய்து, உறவினர்களுக்கு சொல்லி, ஜாதகம் பார்த்து, மந்திரங்கள் ஓதி செய்து வைக்கப்பட்ட திருமணங்களே ஓரிரு ஆண்டுகளில் சந்தி சிரிக்க சபைக்கு வந்து வாதாடி விவாகரத்து பெற்று முடிகிறதே? […]
நமது வாழ்வியல் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போலத்தான் மருத்துவ தேவைகளும் அமையும் என்பதை மறந்து சிலர், “நான் மருந்து மாத்திரைகளைத் தவிர்த்து வாழ்ந்து வருகிறேன்”, அல்லது “மருந்து மாத்திரைகள் இல்லாமல் வாழ முயற்சி செய்கிறேன்” என்று கூறி வாழ்வியலையும் மாற்றிக் கொள்ளாமல் இறுதியில் பெரிய தாக்கங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அதை ஒரு உரையாடலாக பதிவிடுகிறோம்.இதில் சிறிது கற்பனை, மீதி உண்மை. (டூட் என்பது dude என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. Dude என்பது கவலையில்லாமல் சுற்றும் […]
சினிமா என்பதே பொழுதுபோக்குக்காகதான் என்ற வரம்பையும் மீறி சில சினிமாக்கள் நல்ல ஆழமான கருத்துகளையும், சிந்தனைகளையும், சில குறிப்பிட்ட மக்களின் வலியையும் வாழ்க்கை முறையையும் கூட நமக்கு ஆழமாக மனதில் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு சில சினிமாக்கள் பிரபலத்துவத்தின் காரணமாக அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. பல சினிமாக்கள் முகம் தெரியாத காரணத்தால் முடங்கி விடுகின்றன. அப்படி முடங்கிப்போன ஒரு சினிமா தான் சமீபத்தில் வெளியான ஜமா என்ற திரைப்படம். இவ்வளவு விமர்சனம் பேசும் நானே கூட அந்த […]
பரிமாறும் கைகள்
தமிழ்நாட்டின் இன்னும் கூட சாதி பார்க்கும் ஏதோ ஒரு ஊரின் சத்துணவு ஆயா அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் அவர் அந்தப்பணியை செய்ய விடாமல் ஒரு கூட்டம் தடுக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியக்கூடாத 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அந்த ஆயா கீழ்சாதி என்று அவர் சமைத்த உணவை குப்பையிலிடுகின்றனர். கலெக்டர் தலையிட்டு அந்த ஆயாதான் இனி சமைப்பார் என உறுதி ஆன பின்னர், சாதி வெறி […]