உணவு என்பது மனிதனின் அன்றாடத் தேவை என்பதைத் தாண்டி ஒரு பேசுபொருளாக, தகுதியை நிர்ணயிக்கும் விஷயமாக மாறிய பின்பு பல சீரழிவுகள் நடைபெறுகிறது. மொத்த குடும்பமும் சேர்ந்து பெரிய பெரிய பவன்களிலோ அல்லது ரெஸ்டாரண்ட்களிலோ உணவருந்தி புகைப்படங்களைப் பதிவேற்றுவது வாடிக்கையாகி விட்டது. ஏதோ ஒரு விஷேசம் அல்லது ஒரு திருமண நாள், பிறந்தநாள் அல்லது நண்பர்களின் விருந்து என்றில்லாமல் வார இறுதி என்றால் நாங்கள் அந்த பவனில் தான் சாப்பிடுவோம் என்று யதார்த்தமாக ஆரம்பித்தது இன்று வாடிக்கையாகி […]
Tag: ஒழுக்கம்
பூமியின் சுழற்சி மாறினால் நமக்கெல்லாம் எவ்வளவு சிரமமும், இடையூறும், ஏற்படுமோ, அது போலத்தான் நமது அன்றாட சுழற்சி முறை தவறும் போது நமது உடல் சிரமத்திற்குள்ளாவும் என்பதை உணராமல் நம்மில் பலரும் சுய கட்டுப்பாடுகளை இழந்து சந்தோஷம் என்ற பெயரில் கூத்தடிக்கிறோம். காலை உதிக்கும் சூரியன் மாலை மறைவதைப்போல, மனிதன் தனது பணி நேரம், சாப்பாடு நேரம், உறங்கும் நேரம் என்பனவற்றில் ஒழுக்கமாக இருப்பது மிக அவசியமானது. மின்சாரம் வரும் காலத்திற்கு முன்னர் இருட்டிய பின்பு, அதாவது […]
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]
இதற்கு முன்பு வெளிவந்த கடன் எனும் பகாசூரன் வாசிக்க… சிறிது காலத்திற்கு முன்பு வரை புழக்கத்தில் இல்லாத இந்த மொபைல் அல்லது கைபேசி, இப்போது ஒரு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கிறது. தகவல் தொடர்பு முன்னேற்றம், உலகம் நம் கையில் என்று மார்தட்டிக் கொண்டாலும் அதில் பல பிரச்சினைகளும் உள்ளது. மொபைல் மனிதர்களின் நேரத்தை, குறிப்பாக நெருக்கத்தை எடுத்துக்கொள்கிறது. மொபைலுக்கு அடிமை ஆகிப்போகும் மனிதன் சக மனிதனை முகம் கொடுத்துப் […]
நிலைகுலைந்து வரும் பொது ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் அல்லது பொது ஒழுக்கம் என்பது தற்போது பரவலாக வெகுவாக நிலைகுலைந்து வருகிறது. தண்ணீரை வீணாக்குவது, குப்பைகளை கண்ட இடங்களில் வீசுவது, போக்குவரத்து விதிமுறைகளில் அத்துமீறல், இப்படி சிறிய விஷயங்களில் துவங்கி, குறைந்த மதிப்பீட்டில் பத்திரப்பதிவு, வருமான வரி ஏய்ப்பு என்று பெரிய விஷயங்கள் வரை பொது மக்கள் தங்கள் சுய மற்றும் பொது ஒழுக்கத்தில் தவறி தான் இருக்கிறார்கள் என்பது 100 சதவீத உண்மை. ஒரு அரசு அதிகாரி, […]