உலகத்தை அறிந்தவன்துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் கண்ணதாசன் கவலைகளால் மனதைக் குழப்பிக் கொள்ளாமல் ஒரு வேளையில் ஈடுபடும் பொழுது அதை சிறப்பாக செய்ய முடியும். ஏதோ ஒரு எண்ணம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தால் செயலில் கவனம் தவறி விடும். நொடிப் பொழுதின் கவனம் முக்கியம். விளையாட்டுக்கு இது ரொம்பவும் பொருந்தும். விளையாட்டின் சிறந்த சாதனைகளைப் படைத்தவர்கள் பெரும்பாலும் கவலையை ஒதுக்கி, மனதை ஒரு நிலைப் படுத்துப்பவர்களாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் சில காலம் முன்பு வரை உலக்க் […]
Tag: ஒழுக்கம்
மிகைப்படுத்தப்பட்ட பக்திப் பரவசத்தால் வந்த விளைவு. சுற்றுச்சூழல் சீரழிவு. நாம் ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் இரவில் தங்கிக் கூத்தடித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதைப் பதிவிட்டிருந்தோம். அதற்குப் பிறகு இப்போது தான் திருச்செந்தூர் பயணத்திற்கான வாய்ப்பு அமைந்தது. நாம் வருந்தியது போலவே கடற்கரையின் மையப்பகுதியில் ஒரு கால்வாய் உருவாக்கப்பட்டு கழிவுநீர் ஓடி நேரடியாகக் கடலில் கலக்கிறது. அதே தண்ணீரை பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.இது அரசாங்கத்தின் அலட்சியம் என்றாலும், அரசிடம் காரணம் கேட்டால் மிகையான கூட்டத்தின் காரணமாக, சரியாக எதையும் […]
தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது மிகப்பெரிய குற்றங்களுக்கு இருந்தால் போதும் என்பது பொது சிந்தனை. ஏனென்றால் சிறு சிறு தவறுகளை அன்றாடம் நாம் அனைவருமே செய்து பழகி விட்டோம். உதாரணத்திற்கு ஒரு சாலை வழித்தடத்தில் சிவப்பு விளக்கு சமிஞ்ஞையைத் தாண்டிய குற்றத்திற்காக அபராதம் 10000 அல்லது வண்டி பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னால் அதை மொத்த ஜனமும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மாறாக பலர் அதை எதிர்த்து வெடிப்பார்கள். உதாரணத்திற்கு இப்படி வசனங்கள் கிளம்பும்.“கொலை பன்றவன், கொள்ளை […]
என்று தணியுமோ? இதற்கு முன்பு இந்த வார்த்தைகள் என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம் என்று ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்காக உபயோகிக்கப்பட்டது. கிட்டதட்ட அதே அளவு தாக்கமுடைய இன்னொரு விஷயத்திறகுத் தான் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அப்படி நான் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிக்கப் போவது இதற்காகத்தான். என்று தணியுமோ இந்த சினிமா பிரபலங்கள் மீதான மோகம்? ஆம். இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் பல் போன கிழவன் கிழவி வரை பெரும்பாலானோர் சினிமா மீதும் […]
பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது. ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார். இப்போது நீங்கள் […]
அலட்சியத்தின் விளைவு
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் […]
காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]
சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு? ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது. காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம். முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் […]
நான் எனது தாயார் மற்றும் உறவினரோடு, சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டிக்கு TN 67 N 1189 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் 16 நவம்பர், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, 5.45 மணிக்கு வந்தடைந்தவாறு பயணித்தேன். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நாங்கள் நிற்கும் போதே நல்ல மழை. சரியாக 4.15 மணிக்கு நாங்கள் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து எப்போது கிளம்பும் என கேட்டதற்கு 5 மணி ஆகும் என ஆட்களைப் புறக்கணிக்கும் […]
அரசுப் பணியாளர்களின் தனித்தன்மை சமீபத்தில் பரபரப்பான செய்தி ஒன்று. சென்னை மேயரின் பெண் தபேதார் பணியிட மாற்றம் என்பது. இவர் லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் பூசுவதை நிறுத்த மறுத்த காரணத்தால் தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் எனவும், அப்படியென்றால் பணியிட மாறுதல் அடைந்த பிறகு மணலியில் லிப்ஸ்டிக் போட்டால் தப்பு இல்லையா என்றும் ஒரு பக்கம் வலைத்தளவாசிகள் வறுத்து வருகிறார்கள். ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அவரது பணியிட மாறிதலுக்கு மேயர் அலுவலகம் […]