Categories
சினிமா தற்கால நிகழ்வுகள்

விடுதலை- திரை விமர்சனம்

பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]

Categories
இலக்கியம் சினிமா தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள் நேர்காணல்

சர்பட்டா பரம்பரை, தங்கலான் பட ஆடை வடிவமைப்பாளருடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல்.

சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]

Categories
அறிவியல் கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது. ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார். இப்போது நீங்கள் […]

Categories
கருத்து தமிழ்

ஊழியரா?வீட்டு நாயா? நமது வேலைக் கலாச்சாரம் சரியா?

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

பழுதடைந்த நிர்வாகமும், பலியான உயிர்களும்.

சமீபத்தில் நாம் அனைவரும் கேள்விப்பட்டு, சிலர் வருத்தமும், சிலர் கேலிக்கூத்தும் செய்த செய்தி, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கூகுள் மேப், வழிகாட்டுதலின் பேரில், மகிழுந்தில் சென்ற மூவர், பாலத்திலிருந்து, மிகிழுந்து கவிழ்ந்து விழுந்து பலி. இதில் மூன்று உயிர் போய்விட்டதே எனப்பலர் வருத்தப்பட்டாலும், சிலர் இந்த செய்தி வெளியான இணையப்பக்கத்தில் சிரித்தும் வைத்திருக்கிறார்கள்.மூன்று உயிர் பலியானதைத் தாண்டி எதை எண்ணி சிரிக்கத் தோன்றியதோ தெரியவில்லை. வேறு சிலர் இது அந்த மாநிலத்தின் அரசியல் கட்சியின் நிர்வாகத்திறமை சரியால்லாத காரணத்தால் […]

Categories
கருத்து தமிழ்

சமுதாய சீரழிவும், நாமும், சினிமாவும்.

சினிமாவை வெறும் சினிமாவாக, பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கும் மனநிலை எப்போது வருமோ நமது மக்களுக்கு? ரஜினி, விஜய் எனத்துவங்கி இப்போது சாதாரண கதாநாயகர்கள் வரை சினிமாவில் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்படது போலவே ஆகிப்போனது. காரணம் என்னவென்றால், அவர்கள் சிகரெட் பிடிப்பதால் , அவர்களைப் பார்த்து இளைஞர்களும் சிகரெட் பிடிப்பார்கள் என்ற வாதம். முதலில் அது சினிமா, அது ஒரு கற்பனை கதை, கற்பனை உலகம். அந்தக்கதையில் அந்த கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதையோ, கொலை செய்வதையோ, நாம் […]

Categories
கருத்து தமிழ்

பதிப்பாசிரியர் குறிப்பு : நினைவுகளை பற்றி – 03

நினைவுகள் வலைப்பக்கத்தின் நோக்கம், செயல்பாடு, மற்றும் இதற்கு பின்புறமாக இருக்கும் காரண, காரியங்களை தொடர்ந்து ஆராய இந்த ஆசிரியர் பக்கம். Oct-28-2024 அன்புள்ள வாசகர்களுக்கு, நினைவுகள் வலைத்தளம் துவங்கி நான்கு மாத காலத்தில், சின்ன சின்ன மைல்கற்களை கடந்து பயணித்து கொண்டு இருக்கிறது. ஒரு வார இதழ் அல்லது மாத இதழ் நடந்த வேண்டும் என்பது எனக்கொரு நீண்ட கால கனவு. என்னுடைய இளமையில், அதாவது சிறுவனாக நான் வாசித்தது எல்லாம் நியூஸ் பேப்பர்களும், வார இதழ்களும் […]