குஜராத் மாடல். இந்த வார்த்தை ஒரு மிகப்பெரிய அரசியல் சர்ச்சை.அதாவது குஜராத் மாநிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகப் பல துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பதாகத் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 4 முறை இருந்தபோது கூறப்பட்டது. அதாவது அந்த மாநிலம் மின்மிகை மாநிலமாகவும், சூரிய ஒளியில் மின்சாரம் அபிரிமிதமாகத் தயாரிக்கும் மாநிலமாகவும், தொழிற்சாலைகளுக்கும் சூரிய ஒளி மின்சாரம் தரப்பட்டு தொழில் முன்னேற்றமடைந்த மாநிலமாகவும் பேசப்பட்டது. அப்போதைய காலகட்டத்திலேயே விகடனில் […]
Tag: ஊடகங்கள்
நடக்கும் களேபரங்களைப் பார்த்தால் விளக்கேற்ற வேளை வந்துவிட்டதா? என்றுதான் தோன்றுகிறது. மறந்துவிடவில்லை கொரோனாவின் கோர தாண்டவத்தை இன்னும் இந்தப் பொதுஜனம். ஆரம்பத்தில் லாக் டவுன், குவாரன்டைன் போன்ற வார்த்தைகளைக் கேட்டு ஹய்யா, ஜாலி என்று ஆரம்பித்த பயணம், பலசரக்கு வாங்கப் போகிறீர்களா? அல்லது பல்லாங்குழி வாங்கப் போகிறீர்களா என்று மீம்களோடு ஆரம்பித்த பயணம்,அண்ணே கைய கழுவி, கழுவி கை எலும்பு வெளில தெரிய ஆரம்பிச்சுடுச்சு என்று கேலிகளுடன் ஆரம்பித்த பயணம், சாலைகளில், மருத்துவமனை வாசல்களில் என ஆக்ஸிஜன் […]
நீதி நிலைநாட்டப்பட்டது
தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம். ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது. கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை […]
ஒரு மனிதனின் பிரிவுக்காக, அவன் தாய் அழுதால் அவன் நல்ல மகன், அவனது பிள்ளைகள் அழுதால் அவன் நல்ல தகப்பன், அவனது மனைவி அழுதால் அவன் நல்ல கணவன், ஆனால் நாடே அழுதால் அவன் நல்ல தலைவன் என்ற வசனம் இவருக்கு சினிமாவில் மட்டும் பொருந்தவில்லை. சென்ற ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி சமூக வலைத்தளங்களும், ஊடகங்களும் ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்தது. மெரினாவில் இருந்த கடற்கரை கோயம்பேட்டிற்கு இடம் மாறியதாக கண்ணீர் ததும்ப மக்கள் அலை […]
இதை எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை. வன்மையாகக் கண்டிப்பதா? கோபம் கொள்வதா? வருத்தப்படுவதா? இல்லை பரிதாபப்படுவதா? இது எல்லாமே இந்த விஷயத்தில் அடக்கம். தமிழ்நாட்டின் முதன்மைப் பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தினுள்ளே ஒரு இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் இது முதல் சம்பவம் அல்ல என்பது. ஒரு பொறியியல் பல்கலைக்கழக வளாகத்தில், அதுவும் நகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகத்தினுள், ஒருவன் இந்த மாதிரியான பாலியல் […]
என்று தணியுமோ? இதற்கு முன்பு இந்த வார்த்தைகள் என்று தணியுமோ இந்த சுதந்திர தாகம் என்று ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்காக உபயோகிக்கப்பட்டது. கிட்டதட்ட அதே அளவு தாக்கமுடைய இன்னொரு விஷயத்திறகுத் தான் இந்த வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். அப்படி நான் இப்போது இந்த வார்த்தைகளை உபயோகிக்கப் போவது இதற்காகத்தான். என்று தணியுமோ இந்த சினிமா பிரபலங்கள் மீதான மோகம்? ஆம். இன்று பள்ளிக் குழந்தைகள் முதல் பல் போன கிழவன் கிழவி வரை பெரும்பாலானோர் சினிமா மீதும் […]
விடுதலை- திரை விமர்சனம்
பெரும்பாலான திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்றாலும், சினிமாவின் சக்தி என்பது அளப்பரியது. பணக்கார மக்கள் முதல், பாமரன் வரை ஆழமான கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த ஊடகம் சினிமா தான். அப்படி ஒரு கருத்தியல் ரீதியான படம் தான் இந்த வாரம் வெளியான விடுதலை பகுதி-2. இந்தப்படமும் கிட்டத்தட்ட தீபாவளி வெளியீடான அமரன் படம் போல ஒரு போராட்ட களத்தில் இரு அணிகளுக்கு எதிரான போராட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் படம். ஆனால் […]
சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]
பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? மொதுவா இந்த வாக்கியத்தைத் துரு துருவென சேட்டைகள் அதிகம் செய்யும் குழந்தைகளைக் கடிந்து கொள்வதற்காக சிலர் உபயோகப்படுத்துவது. ஆனால் இங்கே இந்த வாக்கியம் ஆச்சரியத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏன் என்பதை கட்டுரை முடிந்த பிறகு அறிந்து கொள்ளலாம். ஏன் நீங்களே கூட கேட்டுக் கொள்ளலாம், பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா? இந்தப் பேராசியர் பெயர், சோபோர்னோ ஐசக் பாரி. இவர் ஏப்ரல் 9, 2012 ல் நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் மருத்துவமனையில் பிறந்தார். இப்போது நீங்கள் […]
காலை எழுந்தவுடன் படிப்பு, பின்புகனிவு கொடுக்கும் நல்ல பாட்டு,மாலை முழுதும் விளையாட்டு என்று பாரதியார் பாடியது பாப்பாக்களுக்கு மட்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கத் துவங்கி விட்டார்களோ தெரியவில்லை. பிரத்தேயமாக தனியார் நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்தப்பதிவு. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற ஒரு வாக்கியம் ஏன் சொல்லப்படுகிறது என்பதை உணராமல், வீட்டுநாய்கள் போல 24 மணிநேரமும் வேலை செய்வதைச் சாடித்தான் இந்தப்பதிவு. ஆம். இன்றைய சூழலில் பெரும்பாலான தனியார் […]