Categories
சிறுதுணுக்கு

அப்பா- அன்பின் வெளிப்பாடு.

சொல்லித் தீர்க்க இயலுமோ?எழுதி தான் விளக்க இயலுமோ? அன்பை வெளிப்படுத்த ஆயிரமாயிரம் வழிமுறைகள் உண்டு. பசியிலிருப்பவனுக்கு உணவால் அன்பைப் பரிமாறலாம். சோகத்தில் இருப்பவனுக்கு ஆறுதலால் அன்பைப் பரிமாறலாம். கடனில் இருப்பவனுக்கு பண உதவியினால் அன்பைப் பரிமாறலாம். நோயிலிருப்பவனுக்கு மருத்துவத்தால் அன்பைப் பரிமாறலாம். கோபத்தினால் யாருக்கேனும் அன்பைப் பரிமாற இயலுமோ? சற்று வியப்பாகத்தானே இருக்கிறது? ஆனால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தன் அன்பை கோபத்தால் பரிமாற ஒரு ஆள் இருக்கிறார்.“அப்பா” தியாகம் என்ற சொல்லை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வழிமுறை […]

Categories
கருத்து

நட்பும், உறவும், சுற்றமும்.

நண்பர்கள். ஒரு வார்த்தையில் ஓராயிரம் அர்த்தங்கள். அர்த்தங்கள் மட்டுமல்ல. அன்பும் அளவளாவியது. தாய் தகப்பனின் அன்புக்கும் ஆதரவுக்கும் ஈடாக, சகோதர, சகோதரிகளின் அக்கறைக்கு ஈடாக அன்பு காட்டி ஆதரவு செலுத்தும் நல் உள்ளங்கள். ஆயிரம் சொந்தங்களுக்கு ஈடானவர்கள்.சில நேரங்களில் அப்பா செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்கள். சில நேரங்களில் அம்மா காட்ட வேண்டிய பாசத்தை காட்டுபவர்கள்.சில நேரங்களில் ஆசான் கொடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கொடுப்பவர்கள். ஆபத்தில் நம்மைக் காக்க முதல் ஆளாக நிற்பவர்கள். நம் பிரச்சினைய அவர் […]

Categories
கருத்து நினைவுகள்

பகிர்தலின் மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 3

பாகம் 01, பாகம் 02 மல்லிகாவோ மனதில் திகிலுடனும், பக்தியுடனும் கடவுளாக மருத்துவரை கை எடுத்து கும்பிட்டு என்ன ஆச்சுங்கய்யா என்று கேட்க,மருத்துவர், “பயப்படும்படியா ஒன்னுமில்ல மா!கண்ணுக்கு மேல பட்ட அடி கண்ணுல பட்டிருந்தா கஷ்டமாயிருக்கும். அடி பலமா பட்டதால நிறைய இரத்தம் போயிருக்கு, அத பாத்ததும் பையன் மயங்கிட்டான்.” “நான் வலிக்கு ஊசி போட்டு, அந்த இடத்துல தையல் போட்டுருக்கேன், அங்க நர்ஸ்ட்ட மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிக்கோங்க, எப்படி சாப்பிடனும்னு கேட்டுக்கோங்க!” “இப்ப பால் […]

Categories
தொடர்கதை

ஆயிரத்தில் ஒருவன் – பாகம் 02

பாகம் 01 குருதி வெள்ளத்தில் மகனை பார்த்த மல்லிகாவுக்கு கைகால் அசையவில்லை! ஆனால் பாசம் உந்துமல்லவா? ஏன் எப்படி என்ற கேள்விகளை எழுப்பாமல், மூத்தவனை ஆட்டோ பிடித்து வர சொல்லி சாமர்த்தியமாக செயல்பட்டால் மல்லிகா! பக்கத்து வீட்டு ஆட்டோகாரர் தான்.பணம் பற்றியெல்லாம் கவலை கொள்ளாது ஏற்றி பரபரப்பாக ஓட்டிச்சென்றார்! போகும் வழியில் இருந்த தனியார் மருத்துவமனைகளில் வண்டி நிற்கவில்லை. தனியார் மருத்துவமனை என்பது இவர்களை பொறுத்தவரை வெறும் பெரிய கட்டிடங்கள் தான்! வேக வேகமாக திருவான்மியூர் சுகாதார […]

Categories
நினைவுகள்

காணாமல் போகும் அண்ணாச்சி கடைகள்

மளிகைக் கடை அண்ணாச்சிகளும், அவர்களின் கேலியான பேச்சுகளும் என்றைக்குமே நினைவிலிருந்து நீங்கா இனிமை. ஒரு மளிகைக்கடை அண்ணாச்சி என்பவர் அந்த குறிப்பிட்ட பகுதியின் மாட்டுவண்டி அச்சாணி போல இருந்த காலம் மாறி இப்போது இணைய வழிப் பொருட்கள் வியாபாரத்தின் அதிகரிப்பால், அண்ணாச்சிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக மாறி வருகிறது. சிரித்து ஜனரஞ்சகமாகப் பொருட்களை வியாபாரம் செய்து, அதில் ஒரு உறவு ஏற்படுவது அண்ணாச்சிகளின் காலம். உதாரணத்திற்கு, “என்ன அண்ணாச்சி நேத்தே லிஸ்ட் குடுத்தேன், இன்னும் சாமான் போட்டு வக்கலியா?“ […]