Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

உலகின் கடைசி அத்தியாயம் – பருவநிலை மாற்றம்

கண்ணுக்குத் தெரியாமல் ஆரம்பித்து விட்ட இறுதி உலகப்போர். எல்நினோ எனும் பருவநிலை மாற்றம் காரணமாக வறட்சியில் வாடும் தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள், மக்களின் பசியைப் போக்குவதற்கும், வறட்சியின் சூழலை கட்டுக்குள் வைக்க அவர்கள் எடுத்துள்ள முடிவு நம்மை கடுமையான சோகத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. எல் நினோ பருவநிலை மாறுதலால் பனாமா கால்வாயில் ஏற்பட்ட தண்ணீர் சிக்கலை பற்றி இந்த பக்கத்தில் எழுதியிருந்தோம். தற்போது தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே என்ற நாட்டில் எல் நினோ பருவநிலை மாறுதலால் […]

Categories
கருத்து தமிழ்

ஆரோக்கியமற்ற உணவக உணவுகள்

உணவு என்பது மனிதனின் அன்றாடத் தேவை என்பதைத் தாண்டி ஒரு பேசுபொருளாக, தகுதியை நிர்ணயிக்கும் விஷயமாக மாறிய பின்பு பல சீரழிவுகள் நடைபெறுகிறது. மொத்த குடும்பமும் சேர்ந்து பெரிய பெரிய பவன்களிலோ அல்லது ரெஸ்டாரண்ட்களிலோ உணவருந்தி புகைப்படங்களைப் பதிவேற்றுவது வாடிக்கையாகி விட்டது. ஏதோ ஒரு விஷேசம் அல்லது ஒரு திருமண நாள், பிறந்தநாள் அல்லது நண்பர்களின் விருந்து என்றில்லாமல் வார இறுதி என்றால் நாங்கள் அந்த பவனில் தான் சாப்பிடுவோம் என்று யதார்த்தமாக ஆரம்பித்தது இன்று வாடிக்கையாகி […]

Categories
கருத்து தமிழ்

இரவு விழிப்பும், ஆரோக்கியமற்ற உணவும் – சீரழியும் சுய கட்டுப்பாடு

பூமியின் சுழற்சி மாறினால் நமக்கெல்லாம் எவ்வளவு சிரமமும், இடையூறும், ஏற்படுமோ, அது போலத்தான் நமது அன்றாட சுழற்சி முறை தவறும் போது நமது உடல் சிரமத்திற்குள்ளாவும் என்பதை உணராமல் நம்மில் பலரும் சுய கட்டுப்பாடுகளை இழந்து சந்தோஷம் என்ற பெயரில் கூத்தடிக்கிறோம். காலை உதிக்கும் சூரியன் மாலை மறைவதைப்போல, மனிதன் தனது பணி நேரம், சாப்பாடு நேரம், உறங்கும் நேரம் என்பனவற்றில் ஒழுக்கமாக இருப்பது மிக அவசியமானது. மின்சாரம் வரும் காலத்திற்கு முன்னர் இருட்டிய பின்பு, அதாவது […]

Categories
கருத்து தமிழ்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா? – 02

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க. பன்றி இறைச்சியைப்பற்றி பேசி கட்டுரையை முடிந்திருந்தோம்.அதாவது பன்றி இறைச்சி என்பது இஸ்லாமிய மதத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அந்த பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்த வெடிகளின் திரிகளை வாயில் கடிக்க வேண்டிய கட்டாயம் வந்த காரணத்தால் தான் சிப்பாய் கலகம் ஏற்பட்டது என்றும் பரவராக அறியப்பட்ட ஒன்று. ஆனால் ஏன்? ஆடு 🐐 மாடுகளின் 🐮 மீது இல்லாத இரக்கம் பன்றிகளின் 🐷 மீது மட்டும் எதற்காக? நான் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா?

இறைச்சி. விடுமுறை நாட்கள் மற்றும் விருந்து என்றாலே பல மனிதர்களின் முதல் தேர்வு இறைச்சி தான். இவற்றின் பல வகைகளையும், இவற்றை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். சிக்கன் மற்றும் மீன் இறைச்சி வகைகள் என்றால் பெரும்பாலான இறைச்சி பிரியர்களும் சமரசமாக ஏற்றுக் கொள்வார்கள். மட்டன் இறைச்சியை ஒரு சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சிகப்பு இறைச்சி உடலில் இரத்தக் கொதிப்பு அதிகமாகக் காரணமாகக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது அவர்களால். மட்டன் எனப்படும் ஆட்டிறைச்சியில் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

திருப்பம் தரும் திருப்பதியின் திருப்தியான விருந்து

நினைவுகளில் இருந்து நீங்காமலிருக்கும் சில விஷயங்களில் ஒன்று சாப்பாடு. சோறு தான் சார் முக்கியம் என்று வாழும் பல உன்னத ஜீவன்களுக்கு இது சமர்ப்பணம். நம் அனைவருக்கும் என்றோ, எங்கேயோ, எப்போதோ சாப்பிட்ட ஒரு உணவு, அது நிகழ்ச்சி விருந்தாகவோ, கோவில் திருவிழா பந்தியாகவோ அல்லது உணவக விருந்தாகவோ கூட இருந்திருக்கலாம், அது என்றும் இனிய நினைவு தான். அப்படி இங்கே பலரும் கடந்து வந்திருக்கக் கூடிய இனிய உணவு உபசாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் […]

Categories
அறிவியல் தமிழ்

தானாக வளரும் மருந்து -அதலைக்காய்

முதலை தெரியும் அதென்ன அதலை? ஆம் இதுவும் முதலை போலத்தான்.சத்தமில்லாமல் திடீரென வெளிப்படும், ஆனால் மிக சக்தி வாய்ந்தது. அடேங்கப்பா , பில்டப் எல்லாம் பயங்கரமா இருக்கே என்று வியப்பு வருகிறதா? பில்டப் மிகையல்ல. இந்த அதலைக்காய் ஆனது வருடம் முழுக்க கிடைக்கும் பொருளல்ல.சீசன் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைப்பது. மீதி நேரங்களில் இதன் விதைகள் மண்ணுக்குள் உயிரோடு இருந்து மண் ஈரமாகும் மழைப்பருவங்களில் மட்டுமே வயல் வெளிகளிலும் மற்ற செடிகளிலும் கொடியாகப் படர்ந்து […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்கள் விரும்பும் பிரியாணியின் கதை

பிரியாணி, பெரும்பாலான நபர்களால் விரும்பி சாப்பிடப்படும், அல்லது அவ்வாறு ஒரு மாயையைக் கொண்டிருக்கும் பிரபல உணவு வகை.இது உண்மையிலேயே பெரும்பாலான நபர்களால் விரும்பி உண்ணப்படுகிறதா என்ற கேள்விக்கு ஆதாரமாக, ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடப்படும் உணவு வகை பிரியாணி என்றே கூறப்படுகிறது. பிரியாணி என்பது ஈரான் நாட்டில் உருவாகி இப்போது தெற்கு ஆசியப்பகுதியில் இருக்கும் பிரபல உணவு. பிரியாணி என்ற வார்த்தை அரிசி என்பதைக் குறிக்கும் பிரிஞ்ச் என்ற பெர்சிய வார்த்தையிலிருந்தோ, அல்லது பிரியன் அ […]