உறவாக வாழ்ந்தவர்கள் உடலாக மட்டுமே நம்மோடு வாழ்ந்தவர்கள் அல்ல. நமது நினைவுகளிலும், உயிரிலும் கலந்த அவர்கள் மண்ணுலகிலிருந்து பூத உடலை விட்டுப் பிரிந்தாலும், நம்மிடையே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்ற யதார்த்தத்தை உணர அதிக காலம் தேவைப்படுகிறது. ஆறுதலுக்காக மட்டுமே ஆன்மா என்ற வார்த்தை உருவாக்கப்பட்டிருந்தால் இங்கே பாதி பேர் நடைபிணம் தான். அனுபவத்தில் பிறந்தது தான் ஆன்மா என்ற அந்த சொல். நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவு உன்னதமான ஆன்மாவாக என்றென்றும் நம்மோடு வாழ்வதை […]
Tag: இழப்பு
அன்று காலை வழக்கம்போலத் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று பரபரப்பாக எழுந்து கொண்டிருக்கிறது மொத்த குடும்பமும். காலையிலேயே அனைவருக்கும் காபி கொடுத்து எழுப்பும் ஆயா (பாட்டி) இன்று இன்னும் ஏன் காபி தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஆயாக்கு உடம்பு சரியால்லாம இருக்கலாம் அதனால எழுந்திருக்க மாட்டாங்க. சரி நாம காபி போட்டுக்குவோம் என்று மருமகள்கள் பிள்ளைகளை சமாதானப்படுத்தி விட்டு தங்களது வேலைகளைத் துவங்குகிறார்கள். ஒரு மருமகள் சமையலறையில் காபி போடுகிறாள், மற்றொருவள் காலை உணவுக்கு […]