சினிமாத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகக் கலக்கிக் கொண்டிருக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர் மற்றும் நமது இனிய நண்பரான திரு.ஏகன் ஏகாம்பரம் அவர்கள் தம்முடைய ஓயாத அலுவலுக்கு மத்தியிலும் நமக்காக பிரத்யேகமாக, நம்முடைய கேள்விகளுக்கு புலனச் செய்தியின் வழியாக குரல் பதிவாக பதில் அனுப்பியிருந்தார். அதை நம் வாசகர்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது அவர் ஹைதராபத் நகரில் தங்கியிருந்து ராம்சரண் படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரைப் பற்றிய கட்டுரை ஏற்கனவே நம்முடைய பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறோம். அதன் […]
Tag: இலக்கியம்
தமிழக மன்னர்களின் நீதிநெறிமுறைகள் பற்றிய சிறிய தகவல்கள். கண்ணகி கோவலனுக்காக வழக்காடிய போது, பாண்டிய அரசன் நெடுஞ்செழியன் தன் தவறை உணர்ந்து கொண்டு, உடனடியாகத் தீர்ப்புக் கூறி அந்த இடத்திலேயே யானே கள்வன் என்று கூறி மரண தண்டனையை ஏற்றக் கொண்டான் என்பதை சிலப்பதிகாரத்தில் படித்திருக்கிறோம். இதில் நமக்குத் தெரியாத செய்தி என்னவென்றால் உலக வரலாற்றிலேயே ஒரு நீதிபதி, தன்னைத்தானே குற்றவாளி (யானே கள்வன்) என்று அறிவித்துக் கொண்ட முதல் வழக்கு இது தான். கதை 2: […]
புத்தகப் பரிந்துரை. பயிற்று பதிப்பகம் வெளியிட்டுள்ள, திரு.இரா.மன்னர் மன்னன் எழுதிய இராஜ இராஜ சோழன் புத்தகத்தை தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலின் முழு வடிவமைப்பு ரகசியத்தையும் அறிந்து கொள்ளலாம். நிழல் கீழே விழாதா?கோபுரம் ஒரே கல்லால் ஆனதா? போன்ற பல கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தில் விடை இருக்கிறது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் கடந்து பல பூகம்பத்தையும் தாண்டி கம்பீரமாக நிற்க என்ன காரணம் […]
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம் குறள் 305, திருவள்ளுவர் இந்த திருக்குறள் அறத்துப்பாலில், துறவறவியலில் வெகுளாமை என்ற தலைப்பில் வருகிறது. கோபத்தை கட்டுப்படுத்தாத மனிதன் அந்த கோபத்தால் தானே அழிகிறான் என்ற பொருளைக் கொண்டது. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க –தன்னை ஒருவன் காக்க விரும்பினால், அவன் சினம் ( கோபத்தை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காவாக்கால்– அப்படி கட்டுப்படுத்த இயலாத காலத்தில் தன்னையே கொல்லுஞ் சினம்– அந்த சினம் அவனையே கொன்று விடும். இதையே […]